சிரியாவில் போராடும் புரட்சி படைக்கு அமெரிக்கா உதவி: அதிபர் ஒபாமா ரகசிய உத்தரவு || Army fight Syria america help president obama secret order
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
  • ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்குவதை நிறுத்துகிறது உக்ரைன்
  • சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
சிரியாவில் போராடும் புரட்சி படைக்கு அமெரிக்கா உதவி: அதிபர் ஒபாமா ரகசிய உத்தரவு
சிரியாவில் போராடும் புரட்சி படைக்கு அமெரிக்கா உதவி: அதிபர் ஒபாமா ரகசிய உத்தரவு
வாஷிங்டன், ஆக. 3-

சிரியாவில் அதிபர் பஷர்அல்-ஆசாத் அரசுக்கு எதிராக போராடி வரும் பொதுமக்களுக்கு ஆதரவாக புரட்சி படை களம் இறங்கியுள்ளது. ஆசாத் ஆதரவு ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக புரட்சி படையின் கை ஓங்கி வருகிறது. சிரியாவின் 2-வது பெரிய தொழில் வர்த்தக நகரமான அலெப்போவின் பெரும் பகுதி மற்றும் துருக்கி எல்லையில் உள்ள நகரங்கள் புரட்சி படையின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன.

புரட்சி படையின் இத்தகைய அபரீதமான முன்னேற்றத்துக்கு அமெரிக்காவின் மறைமுக உதவிதான் காரணம் என கூறப்படுகிறது. அவர்களுக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உள்ளிட்ட பல்வேறு உளவு நிறுவனங்கள் உதவும்படி அதிபர் ஒபாமா ரகசிய உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இவை தவிர அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் புரட்சி படைக்கு நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதனால்தான் சிரியா ராணுவத்துடன் புரட்சி படை சரிசமமாக போரிட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் ஆசாத் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் புரட்சி படைக்கு அமெரிக்கா ரகசிய உதவி செய்வதாக கூறப்படுகிறது. இது சிரியா அதிபர் ஆசாத்துக்கு பெரும் சிக்கலையும், பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமெரிக்கா ரூ. 400 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. அதிபர் ஆசாத் பதவி விலகும்படி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விடுத்த கோரிக்கையை அவர் ஏற்க வில்லை.

மேலும் தன் சொந்த மக்களை கொன்று குவிக்கும் சிரியாவுக்கு பொருளாதார தடை விதிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோற் கடிக்கப்பட்டு விட்டது. உணவு, தண்ணீர், மருந்துகள், துணிமணிகள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் கூடுதலாக ரூ. 700 கோடி ஒதுக்கி அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே சிரியாவில் அமைதி ஏற்படுத்த ஐ.நா. சிறப்பு தூதராக கோபிஅனன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் 6 அம்ச சமரச திட்டத்துடன் சிரியா சென்று அதிபர் ஆசாத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ராணுவம் தாக்குதல் நடத்தி பொதுமக்களை தொடர்ந்து கொன்று குவித்து வருகிறார். அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே இப்பதவியில் இருந்து கோபிஅனன் ராஜினாமா செய்தார். இந்த தகவலை நேற்று அவர் அறிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை: உயிர் பிழைத்த விமானி பேச்சு

முறை எச்சரிக்கை விடுத்தோம்... துருக்கியின் எல்லையை தாண்டிய 5 நிமிடங்கள் எச்சரிக்கை நீடித்தது என்று துருக்கி ....»