மீனவர்களுக்கு மானிய விலையில் கூடுதல் மண்எண்ணை 230 கோழி பண்ணைகள் அமைக்க ரூ. 20 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு || fishermen subsidy additional kerosene 230 chicken farms 20 crore jeyalalitha order
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
மீனவர்களுக்கு மானிய விலையில் கூடுதல் மண்எண்ணை 230 கோழி பண்ணைகள் அமைக்க ரூ. 20 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு
மீனவர்களுக்கு மானிய விலையில் கூடுதல் மண்எண்ணை 230 கோழி பண்ணைகள் அமைக்க ரூ. 20 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு
சென்னை, ஆக. 3-  
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-  
 
இந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் கிராமங்கள் சிறந்து விளங்கினால் தான், நாட்டின் பொருளாதார நிலை உயரும் என்பதால் கிராமங்களில் வாழும் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.
 
கால்நடைகளுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, 585 கிளை நிலையங்களை ஊரக கால் நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தவும், இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட 585 ஊரக கால்நடை மருந்தகங்களுக்காக, 585 புதிய கால்நடை உதவி மருத்துவர்கள், 585 கால் நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை ஏற்படுத்தவும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்ற ஆண்டு உத்தர விட்டார்.
 
இது மட்டுமின்றி, கால்நடை பராமரிப்புத் துறையில் ஏற்கெனவே காலியாக உள்ள 258 கால்நடை உதவி மருத்துவர்கள் பதவிகளையும் சேர்த்து மொத்தமாக 843 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நியமனம் செய்யவும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே ஆணையிட்டார்.
 
தற்போது கிராமப்புற மக்களின் நன்மைக்காக, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தரமான மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்துடன் நடப்பு ஆண்டில் மேலும் 20 புதிய கால்நடை மருந்தகங்கள் 6 கோடி ரூபாய் செல வில் ஏற்படுத்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  
 
கால்நடை பராமரிப்புத் தொழிலுக்கு அடுத்த முக்கியத் தொழிலாக விளங்கும் கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சங்கரன் கோவில் மண்டலம் என இரு புதிய கோழி பண்ணைத் தொகுப்பு மண்டலங்களை உருவாக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இதன்படி, இந்த மண்டலங்களில் உள்ள 7 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் அவர்களின் சுயவிருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 1000 முதல் 5000 கறிக் கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைத்துக் கொள்வதற்காக 20 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 230 பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,  
 
திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக் கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய 16 மாவட்டங்களில் நாட்டு கோழி வளர்ப்பினை ஊக்கப் படுத்த, 2 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் 250 கோழிகள் கொண்ட 35 பண்ணைகள் அமைக்கப்படும். இதேபோன்று, மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்களால் உபயோகப்படுத்தப்படும் மண்ணெண்ணெயினால் இயக்கப்படும் வெளி பொருத்தும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகிற்கு மானிய விலையாக லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வீதம் அளிக்கப்பட்டு வந்த மண்ணெண்ணெயின் அளவை 200 லிட்டரிலிருந்து 250 லிட்டராக உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு கூடுதலாக 37 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.
 
எனவே, இந்த ஆண்டு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 250 லிட்டர் மண்ணெண்ணெய் திட்டத்திற்காக 47 கோடியே 60 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  
 
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்களுக்கு கூடுதலாக ஒரு படகிற்கு 100 லிட்டர் வரை வெளிச்சந்தை விலையில் வழங்குவதற்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்-அமைச்சரின் இந்த நடவடிக்கைகள் கிராமங்கள் வளர்ச்சி அடையவும், கிராமப் பொருளாதாரம் மேம்படவும் வழிவகுக்கும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அரசியல் சட்டமே ஒரே புனித நூல், இந்தியா என்பதுதான் அரசின் ஒரே மதம்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

‘முதலில் இந்தியா’ என்பதுதான் எனது அரசின் ஒரே மதம், அரசியல் சட்டமே ஒரே புனித நூல் ....»