வேலூரில் லாரி மீது கார் மோதல் என்ஜினீயரிங் மாணவர்கள் 3 பேர் பரிதாப சாவு || vellore lorry car clash engineering student 3 people dead
Logo
சென்னை 07-07-2015 (செவ்வாய்க்கிழமை)
  • பிரதமர் மோடி இன்று கஜகஸ்தான் பயணம்
  • பெரம்பலூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து
  • நடுக்கடலில் கஞ்சா கடத்தியதாக தனுஷ்கோடி மீனவர்கள் 4 பேர் இலங்கையில் கைது
வேலூரில் லாரி மீது கார் மோதல் என்ஜினீயரிங் மாணவர்கள் 3 பேர் பரிதாப சாவு
வேலூரில் லாரி மீது கார் மோதல் என்ஜினீயரிங் மாணவர்கள் 3 பேர் பரிதாப சாவு
வேலூர்,ஆக.3-
 
வேலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் ராஜிசோலங்கி, தலூர்தா ரெட்டி, மாருதி, ஜெய்சங்கர், மணிகண்டன் இவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
 
ராஜிசோலங்கியை பார்ப்பதற்காக அவரது நண்பர் ஒருவர் ரெயிலில் வந்தார். அவரை வரவேற்பதற்காக ராஜிசோலங்கி உள்ளிட்ட 5 மாணவர்களும் ஒரு காரில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.  
 
காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலை தடுமாறி தறிகெட்டு ஓடத் தொடங்கியது. அப்போது எதிர்ரோட்டில் லாரி ஒன்று சாலை ஒரம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரி மீது கார் வேகமாக மோதியது.  
 
இந்த விபத்தில் மாணவர் ராஜிசோலங்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் மாருதி பரிதாபமாக இறந்தார். தலூர்தாரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஜெய் சங்கர், மணிகண்டன் இருவருக்கும் தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு - ஜெயலலிதா நடவடிக்கை

தமிழக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முல்லைப்பெரியாறு அணை வளாகத்தில் ஒரு ....»