சங்கரன்கோவிலில் தனியார் பஸ் மோதி பள்ளி மாணவன் பலி: பஸ்சை உடைத்து நொறுக்கிய பொதுமக்கள் || sankaran kovil private bus clash school student dead public crushed broken bus
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரெயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்தது: 5 பேர் உயிரிழப்பு
  • ஜிகா வைரஸ் குறித்த தகவல்கள் அறிய டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சங்கரன்கோவிலில் தனியார் பஸ் மோதி பள்ளி மாணவன் பலி: பஸ்சை உடைத்து நொறுக்கிய பொதுமக்கள்
சங்கரன்கோவிலில் தனியார் பஸ் மோதி பள்ளி மாணவன் பலி: பஸ்சை உடைத்து நொறுக்கிய பொதுமக்கள்
சங்கரன்கோவில், ஆக.3-
 
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர், மாரியப்பன். இவருடைய மூத்த மகன் சங்கர்(வயது15).மூத்த மகன் சங்கர் சங்கரன்கோவில் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவந்தான்.
 
வழக்கம்போல் நேற்றும் சைக்கிளில் பள்ளிக்கு சென்றான். பள்ளி முடிந்து மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான். ஒரு மில் பகுதியில் வந்த போது, அவனது சைக்கிளின் மீது பின்னால் ராஜபாளையத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் மோதியது. இதில் சங்கர் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டான். உடனே அந்தபஸ் நிறுத்தப்பட்டது.
 
மாணவன் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அந்த பஸ்சின் டிரைவரும், கண்டக்டரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். பஸ்சில் பயணம்செய்து வந்த பயணிகளும், விபத்து நடந்த பகுதியில் நின்றவர்களும் பதறியடித்து ஓடிவந்தனர்.
 
உயிருக்கு போராடியபடி கிடந்த மாணவனை அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் மாணவன் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதனால் அங்கு திரண்டு நின்றவர்கள் ஆத்திரம் அடைந்து மாணவன்மீது மோதிய பஸ்சின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்தனர்.
 
விபத்து குறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பள்ளிக்கு சென்ற மகன் பஸ் மோதி பலியானதை அறிந்து, சங்கரின் தாய் மகேசுவரி, தந்தை மாரியப்பன் பதறியபடி ஓடி வந்தனர். சாலையில் பிணமாக கிடந்த மகனைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
 
இதனைத்தொடர்ந்து மாணவன் சங்கரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, விபத்துக்கு காரணமாக தனியார் பஸ்சின் டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமாரை கைது செய்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

தாசில்தாரை அழகிரி தாக்கியதாக வழக்கு: வீடியோ ஆதாரங்களை 15 தினங்களில் சமர்ப்பிக்க போலீசாருக்கு, மேலூர் கோர்ட்டு உத்தரவு

மேலூர், பிப். 8–மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டியில் வல்லடியார் கோவில் உள்ளது. 2011 ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif