மதுரை தி.மு.க.வில் பிளவா?: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி || madurai dmk Split m.k.alagiri interview madurai airport
Logo
சென்னை 05-09-2015 (சனிக்கிழமை)
  • கர்நாடக மாநிலத்தில் இன்று பந்த்
  • மியூசிக் டைரக்டர் ஆதேஷ் ஸ்ரீவாஸ்தவா புற்றுநோயால் மரணம்
  • டெல்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்
  • ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
  • காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்
  • நடுவானில் பயணிக்கு நெஞ்சுவலி: சென்னையில் விமானம் அவசர தரையிறக்கம்
மதுரை தி.மு.க.வில் பிளவா?: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
மதுரை தி.மு.க.வில் பிளவா?: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
மதுரை, ஆக. 3-

மத்திய மந்திரி மு.க.அழகிரி கடந்த 15 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றிருந்தார். தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை வந்த அவர் பின்னர் அங்கிருந்து நேற்று மாலை விமானம் மூலம் மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டு வந்து மு.க.அழகிரியை வரவேற்றனர். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி (மதுரை புறநகர்), மூக்கையா (தேனி), முன்னாள் துணைமேயர் மன்னன் மற்றும் பகுதி செயலாளர்கள், முன்னாள் மண்டலத்தலைவர்கள், தி.மு.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களான மதுரை நகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கோ.தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தை வேலு, முன்னாள் மண்டலத் தலைவர் குருசாமி, இளை ஞரணி செயலாளர் ஜெயராம் உள்ளிட்ட தி.மு.க.வினர் மு.க.அழகிரியை வரவேற்க விமான நிலையத்திற்கு வராமல் புறக்கணித்தனர். இதனால் மதுரை தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் மு.க.அழகிரியிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கே. மதுரை தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

ப. அப்படி ஒன்றும் இல்லை. நான் இதைப்பற்றி நினைக்கவும் இல்லை. ஆனால் நான் மனசாட்சிபடி நடக்கிறேன்.

கே. நீங்கள் ஜப்பானில் இருந்து மதுரை திரும்பியதும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தி.மு.க. வினர் கூறியிருக்கிறார்களே?

ப. எதுவும் கிடையாது. அனைவரும் கட்சி வேலை பார்ப்போம்.

கே. நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க.வினர் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்களே?

ப. இந்த வேலையை தவிர அ.தி.மு.க. அரசு வேறு எந்த வேலையும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

முதல்வர் வேட்பாளரை கருணாநிதிதான் தீர்மானிப்பார்: மு.க.அழகிரி மீது ஐ. பெரியசாமி தாக்கு

திண்டுக்கல், செப்.5–உறுப்பினராக இல்லாத மு.க. அழகிரிக்கு பதில் சொல்ல தேவை இல்லை. முதல்வர் வேட்பாளரை கருணாநிதிதான் ....»