சிரியாவில் உச்சகட்ட போர்: ஐ.நா. சிறப்பு தூதர் கோபி அனான் ராஜினாமா || Syria crisis Kofi Annan quits as UN Arab League envoy
Logo
சென்னை 25-04-2015 (சனிக்கிழமை)
  • பல்லடம் அருகே கார் - லாரி மோதல்: 6 பேர் பலி
  • மேற்கு வங்க மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்
  • தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடத்தை தேர்வு செய்ய மத்திய குழு இன்று செங்கல்பட்டு வருகை
சிரியாவில் உச்சகட்ட போர்: ஐ.நா. சிறப்பு தூதர் கோபி அனான் ராஜினாமா
சிரியாவில் உச்சகட்ட போர்: ஐ.நா. சிறப்பு தூதர் கோபி அனான் ராஜினாமா
ஜெனீவா, ஆக. 2-
 
சிரியாவில் புரட்சிப் படையிடமிருந்து வர்த்தக நகரமான அலெப்போவை மீட்பதற்காக அதிபர் ஆசாத்தின் அரசுப் படையினர் உக்கிரமான போரை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் கடும் உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. இது மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா. ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
இதற்கிடையே அங்கு அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் ஐ.நா.-அரபு நாடுகளின் சிறப்பு தூதர் கோபி அனான் ஈடுபட்டு வந்தார். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக புதிய திட்டத்தையும் அவர் வகுத்தார். ஆனால் அவரது திட்டத்தை இருதரப்பிலும் முழுமையாக பின்பற்றாததால் வன்முறை தொடர்கிறது.  இவ்வாறு தனது முயற்சிக்கு உரிய பலன் அளிக்காத நிலையில், கோபி அனான் தனது பதவியில் இருந்து விலக உள்ளார்.
 
இந்த மாத இறுதியில் கோபி அனானின் பதவிக்காலம் முடிகிறது. அதனையடுத்து அவர் தனது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்தார்.
 
இருந்தாலும் சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியை தொடரவேண்டும் என்று அரபு லீக் நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அனான் தெரிவித்தார்.
 
சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பாஸ்ட் புட் கடை ஊழியரை கொடூரமாக தாக்கிய அமைச்சரின் மகன்

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பாஸ்ட் புட் கடை ஊழியரை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ....»