பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது, தீவிரவாதிகள்: போலீஸ் அதிகாரிகள் அறிவிப்பு || pakistan srilanka cricket players attack
Logo
சென்னை 23-07-2014 (புதன்கிழமை)
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது, தீவிரவாதிகள்: போலீஸ் அதிகாரிகள் அறிவிப்பு
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது, தீவிரவாதிகள்: போலீஸ் அதிகாரிகள் அறிவிப்பு
லாகூர், ஆக. 2-

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009-ம் ஆண்டு, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிரிக்கெட் வீரர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த பஸ்சின் மீது ‘மர்ம’ ஆசாமிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இலங்கை வீரர்களை கொல்லும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பஸ்சில் வீரர்களின் பாதுகாப்புக்காக சென்ற போலீசார் பதிலடி கொடுத்தனர். இதில் ஒருவன் பலியானான். அவன் பெயர் அப்துல் கபார் கெய்ஸ்ரானி என்ற சாய்புல்லா என பின்னர் தெரியவந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து, இலங்கை வீரர்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினர். கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ்சில் தாக்குதல் நடத்தியவர்கள் யார்? என்ற விசாரணை நடந்தது.

சம்பவம் நடந்த முல்தடான் காஸிகேட் பாலத்தில் இருந்து விசாரணை தொடங்கப்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தது. இதில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தீவிரவாதிகள்தான் என்பது உறுதியானது.

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் மாகாண போலீசார் இதை உறுதி செய்தனர். அதுதொடர்பாக, இன்று பேட்டியளித்த சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு (ஆபரேஷன்ஸ்) கோஹார் நபீஸ், இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தீவிரவாத அமைப்பு என்று உறுதியாகி உள்ளது. கொல்லப்பட்ட சாய்புல்லா தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலீபான் அமைப்புடன் தொடர்புடையவன் ஆவான். அவனுக்கு வேறு சில தீவிரவாத அமைப்புகளுடனும் தொடர்பு இருந்துள்ளது என்று தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

இந்தியாவிலிருந்து குறுகிய நேரத்தில் சீனா செல்ல புதிய பாலம்: நேபாளத்தில் திறக்கப்பட்டது

நில வழியாக மிக குறுகிய தூரத்தில் சீனாவுடன் இந்தியாவை இணைக்கும் புதிய பாலம் ஒன்று நேபாள ....»