‘மாண்டலின்’ இசைக் கலைஞர் ராஜேஷை அதிகமாக காதலிக்கிறேன்: நடிகை மீரா ஜாஸ்மின் || mandalin instrument artist rajesh love actress meera jasmin
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
‘மாண்டலின்’ இசைக் கலைஞர் ராஜேஷை அதிகமாக காதலிக்கிறேன்: நடிகை மீரா ஜாஸ்மின்
‘மாண்டலின்’ இசைக் கலைஞர் ராஜேஷை அதிகமாக காதலிக்கிறேன்: நடிகை மீரா ஜாஸ்மின்
மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷ் 'பாலோயிங் மை ஹார்ட்' என்ற பெயரில் புதிய வீடியோ இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதில் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.

இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் நடிகர் கமலஹாசன் பங்கேற்று ஆல்பத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கமல் பேசும் போது நானும் இசை தெரியாத பார்வையாளன்தான். கணக்கு பாடத்துக்கு பயந்தே பள்ளி படிப்பை விட்டேன். இசையை வைத்து வித்தியாசமாக இந்த ஆல்பம் தயார் செய்யப்பட்டு உள்ளது. பாடல் வரிகள் இல்லை. இசை மட்டுமே உள்ளது என்றார்.

விழாவில் நடிகை மீரா ஜாஸ்மின் கலந்து கொண்டார். மீராஜாஸ்மினும் மாண்டலின் ராஜேசும் காதலிப்பதாகவும் இருவரும் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாயின. அதுபற்றி மீரா ஜாஸ்மினிடம் நிருபர்கள் கேட்டனர்.

மாண்டலின் ராஜேசும் நீங்களும் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொண்டது உண்மையா? என்று கேட்கப்படடது. அதற்கு பதில் அளித்து மீரா ஜாஸ்மின் கூறியதாவது:-

மாண்டலின் ராஜேஷை நான் அளவுக்கு அதிகமாக காதலிப்பது உண்மைதான். ஆனால் எங்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று எனக்கு தெரியாது. மாண்டலின் ராஜேஷ் உருவாக்கிய இசை ஆல்பம் மிகவும் கஷ்டமான முயற்சி. அதை சிறப்பாக செய்துள்ளார். எனவேதான் ஆல்பத்தில் நடித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்