வெள்ளத்தில் மிதக்கும் வடகொரியா 60 ஆயிரம் பேர் வீடு இழந்தனர் || Floating flood North Korea 60 thousand people had lost house
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
வெள்ளத்தில் மிதக்கும் வடகொரியா 60 ஆயிரம் பேர் வீடு இழந்தனர்
வெள்ளத்தில் மிதக்கும் வடகொரியா
60 ஆயிரம் பேர் வீடு இழந்தனர்
பியாங்கான், ஆக. 2-

வடகொரியா நாட்டில் கடந்த 1 மாதமாக பலத்த மழை கொட்டியது. இதனால் பியாங்கான், மற்றும் காங்வான் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் இருந்த பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. இதனால் 60 ஆயிரம் பேர் வீடுகள் இல்லாமல் தவிக்கிறார்கள்.

வெள்ளத்திற்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்கிறது. சில இடங்களில் ஆறுகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து உள்ளன.

சில அணைகள் உடையும் நிலையில் இருப்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐ.நா. சபை முன் வந்து உள்ளது. இதே நிலைமை நீடித்தால் சமாளிக்க முடியாமல் பிரச்சினைகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.     
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif