ஒலிம்பிக்கில் விட்டுக்கொடுத்து ஆடியதால் சர்ச்சை: 8 பேட்மிண்டன் வீராங்கனைகள் தகுதி நீக்கம் || 8 badminton players banned from playing olympics for false play
Logo
சென்னை 01-08-2015 (சனிக்கிழமை)
  • மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று உறுதி அளித்தால் மட்டுமே உடல் வாங்கப்படும்: சசிபெருமாள் மகன் பேட்டி
  • சென்னையிலிருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற ரெயில் பெட்டியில் தீ விபத்து
  • சசிபெருமாளின் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
  • டாஸ்மாக் மதுபான கடைகளால் தமிழ்நாடு நாசமாகி விட்டது: வைகோ குற்றச்சாட்டு
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு
ஒலிம்பிக்கில் விட்டுக்கொடுத்து ஆடியதால் சர்ச்சை: 8 பேட்மிண்டன் வீராங்கனைகள் தகுதி நீக்கம்
ஒலிம்பிக்கில் விட்டுக்கொடுத்து ஆடியதால் சர்ச்சை: 8 பேட்மிண்டன் வீராங்கனைகள் தகுதி நீக்கம்
லண்டன், ஆக.2-

அணிகள் விளையாட்டு போட்டிகளில் சில சமயங்களில் லீக் ஆட்டத்தில் இருந்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் தருணத்தில் சில அணிகள் வலுவான எதிரணியை நாக்-அவுட் சுற்று தொடக்கத்தில் சந்திப்பதை தவிர்க்கும் நோக்கில் சில லீக் ஆட்டங்களில் வேண்டுமென்றே தோற்கும் மலிவான தந்திரத்தை கையாள்வது உண்டு. இது பற்றி அந்த நேரத்தில் சர்ச்சை எழுந்தாலும் பின்னர் நீர்த்து போய்விடும்.

விளையாட்டின் உத்வேகத்துக்கும், நேர்மைக்கும் மாறாக `நாக்-அவுட்' சுற்றை கணக்கை கருத்தில் கொண்டு வேண்டுமேன்றே தோற்று ஊழலில் ஈடுபடும் அசிங்கம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த மோசமான கலாசாரம், பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் நடந்துள்ளது. இதில் பங்கேற்ற 16 ஜோடிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. `ஏ' பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சீனாவின் வலுவான ஜோடியான யு யங்-வாங் ஜியாலி ஜோடி, தென் கொரியாவின் ஜுங் கியுங்-கிம் ஹா நா ஜோடியிடம் தோல்வி கண்டது. வேண்டுமேன்றே பந்தை வெளியே அடித்தும், வலையில் அடித்தும் புள்ளிகளை சீன ஜோடி தாரைவார்த்ததால், ரசிகர்கள் கூச்சலிட்டனர். கால் இறுதியில் மற்றொரு சீன ஜோடியை சந்திப்பதை தவிர்க்கவே யு யங்-வாங் ஜியாலி ஜோடி தோல்வி கண்டது.

இதேபோல் தென் கொரியா, இந்தோனேஷியா ஆகிய அணிகளும், அடுத்த சுற்று எளிதாக அமைவதற்கு ஏற்ப விட்டுக்கொடுத்து விளையாடியதாக புகார் வெளியானது. இதுபோன்ற புகார் மீது சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனம் தான் இறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று லண்டன் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் புகார்கள் தொடர்பாக, போட்டியின் வீடியோ காட்சிகள் மூலம் ஆய்வு செய்த உலக பேட்மிண்டன் சம்மேளனம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. கால் இறுதிக்கு தகுதி பெற்று இருந்த யு யங்-வாங் ஜியாலி (சீனா), ஜுங் குயிங்-கிம் ஹா நா (தென் கொரியா), ஹா ஜுங் இன்-கிம் மின் ஜூங் (தென் கொரியா), ஜெசியா போலி-மெலியனா ஜஹரி (இந்தோனேஷியா) ஆகிய 4 ஜோடிகளை ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த பிரிவில் எஞ்சியுள்ள ஜோடிகளுக்கு கால்இறுதி வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே, தகுதி நீக்கம் முடிவை சீனா ஏற்றுக் கொண்டது. தென் கொரியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இதனை எதிர்த்து அப்பீல் செய்துள்ளன. அப்பீல் மனுவை உலக பேட்மிண்டன் பெடரேஷன் பரிசீலனை செய்து வருகிறது. முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று உலக பேட்மிண்டன் பெடரேஷன் பொதுச்செயலாளர் தாமஸ் லுன்ட் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கின் உத்வேகத்துக்கும், விளையாட்டு ஒழுங்கு நெறிமுறைகளுக்கும் மாறாக பேட்மிண்டன் வீராங்கனைகள் ஆடியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் `பி' பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி 2 வெற்றி கண்டும் கால் இறுதிக்கு தகுதி பெறமுடியவில்லை. இதே போல் சீனத்தைபே மற்றும் ஜப்பான் ஜோடிகள் தலா 2 வெற்றி பெற்று இருந்ததாலும் செட் புள்ளிகள் விகிதாச்சார அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இந்திய பேட்மிண்டன் சங்கம் சார்பில் லண்டன் ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழுவிடம் அளித்த புகாரில், `பி' பிரிவில் ஜப்பான்-சீன தைபே அணிகள் இடையிலான ஆட்டத்தில் அடுத்த சுற்றில் எளிதான அணியுடன் மோத வேண்டும் என்ற நோக்கில் ஜப்பான் அணி வேண்டுமென்றே தோற்றது. இதனால் இந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது. எனவே இதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் லண்டன் ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்து விட்டது.

வேண்டுமென்றே ஆட்டத்தில் தோற்கும் வீரர்-வீராங்கனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வீராங்கனை ஜுவாலா கட்டா, பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

விக்டோரியன் ஓபன் ஸ்குவாஷ்: அரைஇறுதிக்கு ஜோஸ்னா தகுதி

விக்டோரியன் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ....»

MM-TRC-B.gif