சொத்து குவிப்பு வழக்கு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு 14 ந் தேதி வரை காவல் நீடிப்பு || jaganmohan reddy police custody extended property scam
Logo
சென்னை 29-07-2014 (செவ்வாய்க்கிழமை)
சொத்து குவிப்பு வழக்கு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு 14-ந் தேதி வரை காவல் நீடிப்பு
சொத்து குவிப்பு வழக்கு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு 14-ந் தேதி வரை காவல் நீடிப்பு
ஐதராபாத், ஆக.2-

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி. வருமானத்துக்கு அதிகமாக ரூ.850 கோடிக்கு மேல் சொத்து குவித்ததாக சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு சஞ்சல்குடா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது காவல் நேற்றுடன் முடிந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயிலில் இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் காவலை வீடியோ கான்பரன்சிங் மூலம் 14-ந் தேதி வரை நீடித்து சி.பி.ஐ. பிரின்சுபல் சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

இதே போன்று சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி பெங்களூர் ஜெயிலில் உள்ள முன்னாள் பா.ஜனதா மந்திரி ஜனார்த்தன ரெட்டி மற்றும் சஞ்சல்குடா ஜெயிலில் இதே வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் வருவாய்த்துறை மந்திரி மோப்தேவி ஆகியோருக்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறப்பு நீதிபதி வரும் 14-ந் தேதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

காசா மீதான தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம்: போலீஸ் தடியடி

காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து இன்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ....»