ராமேசுவரத்தில் இலங்கை கடத்தல்காரர் கைது || Rameshwaram rules violation stay srilankan arrest
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
ராமேசுவரத்தில் இலங்கை கடத்தல்காரர் கைது
ராமேசுவரத்தில் இலங்கை கடத்தல்காரர் கைது
ராமேசுவரம், ஆக. 2-

இலங்கை தலைமன்னாரை சேர்ந்தவர் ஜெயசீலன். கடந்த 2009ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த இவரது விசா கடந்த ஆண்டுக்கு முன்பு முடிந்தது. தொடர்ந்து இவர் தமிழகம், கேரளாவில் உள்ள மதுக்கடைகளில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இலங்கைக்கு படகில் கள்ளத்தனமாக செல்ல ஜெயசீலன் ராமேசுவரம் வந்தார். மார்க்கெட் தெருவில் சுற்றித்திரிந்த அவரை கியூ பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜெயசீலன் 1993ம் ஆண்டு முதல் இலங்கைக்கு அகதிகளை அழைத்து சென்றதும், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் 1997ல் விடுதலையாகி இலங்கைக்கு சென்றதும் தெரியவந்தது.

கடந்த 2009ம் ஆண்டு சென்னைக்கு வந்தபோது பாஸ்போர்ட்டு தொலைந்து விட்டதால் இங்கேயே சுற்றி திரிவதாகவும் இலங்கை போலீசாரும் தன்னை தேடுவதாகவும் ஜெயசீலன் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கியூ பிரிவு போலீசார் இலங்கை வாலிபரை ராமேசுவரம் கோவில் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - இராமநாதபுரம்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif