மின் தொகுப்புகளில் கோளாறு: எந்த மாநிலத்தையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை வீரப்ப மொய்லி பேட்டி || minister veerappa moily interview
Logo
சென்னை 22-12-2014 (திங்கட்கிழமை)
மின் தொகுப்புகளில் கோளாறு: எந்த மாநிலத்தையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை- வீரப்ப மொய்லி பேட்டி
மின் தொகுப்புகளில் கோளாறு: எந்த மாநிலத்தையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை- வீரப்ப மொய்லி பேட்டி
புதுடெல்லி, ஆக. 1-

மத்திய மின்துறை மந்திரியாக பொறுப் பேற்றுக் கொண்ட வீரப்ப மொய்லி கூறியதாவது:-

வடமாநிலங்களில் மூன்று மின்தொகுப்புகளில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது. அந்த கோளாறு போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டு, முழு அளவில் மின் விநியோகம் தொடங்கி உள்ளது. மின் தொகுப்புகள் பழுதடைய சில மாநிலங்கள் கூடுதலாக மின்சாரத்தை எடுத்ததே காரணம் என்று குற்றம்சாட்ட நான் விரும்பவில்லை.

எந்த ஒரு மாநிலம் மீதும் குற்றம் சாட்ட மாட்டேன். இந்த பிரச்சினைக்கு சரியான நேரத்தில் குறுகியகால மற்றும் மத்திய கால தீர்வுகளை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

நம்மிடம் தேவையான ஆற்றலும், சக்தியும் உள்ளன. எனவே இது போன்ற சவால்களுக்கு தீர்வு காண்பது கஷ்டமான காரியம் அல்ல. மின்சார பற்றாக்குறைக்கு மட்டுமின்றி எரிபொருள் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.

இவ்வாறு மொய்லி கூறினார்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை

காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இரு மாநிலங்களிலும் முதல் கட்ட ....»