போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அன்னாஹசாரே ஆதரவாளர் மீது இளைஞர் காங்கிரசார் புகார் || police commissioner office anna hazare supporters against youth congress complaint
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
  • அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இரு மாணவர்கள பலி
  • தெலுங்கானா சட்டமன்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நவம்பர் 5-ம் தேதி தொடங்குகிறது
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அன்னாஹசாரே ஆதரவாளர் மீது இளைஞர் காங்கிரசார் புகார்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அன்னாஹசாரே ஆதரவாளர் மீது இளைஞர் காங்கிரசார் புகார்
சென்னை, ஆக. 1-

மத்திய சென்னை இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரஞ்சன்குமார் மற்றும் நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய மந்திரி சிதம்பரத்தின் வீட்டு முன்பு அன்னாஹசாரே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பேட்டி அளித்த நான், அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தேன். இது டி.வி.க்களில் வெளிவந்தது.

இதனை அன்னாஹசாரே ஆதரவாளரான ரமேஷ் சேதுராமன் என்பவர் காப்பி எடுத்து டுவிட்டர் இணையதளத்தில் போட்டு விமர்சனம் செய்துள்ளார். அதில் இவர்களை பார்த்தால் இளைஞர் காங்கிரசார் மாதிரி தெரியவில்லை. குண்டர்கள்போல இருக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், தலித் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையிலும் கருத்து கூறியுள்ளார். எனவே அவர் மீது எஸ்.சி.,எஸ்.டி. சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி ரஞ்சன்குமார் கூறும்போது, ரமேஷ் சேதுராமனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தி.நகரில் அம்பேத்கார் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிக்கு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு நடவடிக்கை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif