தி.மு.க.வை அழிக்க நில அபகரிப்பு வழக்கு போடுகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு || dmk m.k.stalin speech thiruvallur land acquisition complaint
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
தி.மு.க.வை அழிக்க நில அபகரிப்பு வழக்கு போடுகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க.வை அழிக்க நில அபகரிப்பு வழக்கு போடுகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவள்ளூர், ஆக.1-

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அ.தி.மு.க. அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. பொறுப்பாளர் சுதர்சனம் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நில அபகரிப்பு என்ற வழக்கை கொண்டு வந்துள்ளனர். என் மீதும் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்தனர். தி.மு.க. ஆட்சியில் தொழில் புரட்சி நடைபெற்றது. 11 மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வில்லை.

உள்ளாட்சி துறையில் லஞ்ச லாவண்யம் நடை பெறுகின்ற ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று 2-ம் ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார். தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு மின்சார கட்டணம் உயர்வு, பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என்று விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது.

தடையில்லா மின்சாரம் வழங்குவேன் என்றார். ஆனால் எதையுமே செய்யவில்லை. மக்களை பற்றி கவலைப்படாததால் அரசு கோப்புகள் தேங்கி கிடக்கின்றது.ஆட்சி மாறி ஒரு வருடம் மேல் ஆனாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது தி.மு.க. தமிழக மக்களை காப்பாற்ற தி.மு.க. பீனிக்ஸ் பறவை போல் எழுந்து நிற்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சுந்தரம், கே.பி.பி.சாமி, முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, திருத்தணி கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் மு.ஈஸ்வரப்பன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், கும்மிடிப்பூண்டி வேணு, ஆவடி சா.மு.நாசர், எம்.நாராயணன், என்.கவிதா நாராயணன், நடுக்குத்தகை மா.ராஜூ, பி.வை.ரவி, எம்.ஜெயக்குமார், கோ.வி. இளையபெருமாள் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்