உத்தரபிரதேசத்தில் 80 எம்.பி. தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல்: டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது || uttar pradesh MP Constituency BJP candidate list
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
உத்தரபிரதேசத்தில் 80 எம்.பி. தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல்: டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது
உத்தரபிரதேசத்தில் 80 எம்.பி. தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல்: டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது
புதுடெல்லி, ஆக. 1-

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 12 மேயர் பதவிக்கான இடங்களில் பா.ஜனதா 10 இடங்களை வென்றது. இந்த 10 மேயர்களுக்கும் டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது.

பின்னர் உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 50 இடத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்.

இதற்காக வரும் டிசம்பர் மாதத்தில் 80 தொகுதிகளுக்கும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் தயார் செய்து வெளியிடப்படும். அப்போதுதான் ஒவ்வொரு தொகுதி வேட்பாளரும் மக்களை கிராமந்தோறும் சென்று சந்திக்க முடியும்.

உத்தரபிரதேசத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மத்தியில் எளிதாக ஆட்சியை கைப்பற்றி விடலாம். இன்னும் பாராளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டு அவகாசம் உள்ளது. இந்த 2 ஆண்டுகளும் நன்றாக உழைத்தால் வெற்றிக்கனியை எளிதாக பறித்து விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கெயில் நிறுவனத்துக்கு எரிவாயு குழாய் பதிக்க அனுமதி: விவசாயிகள் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

கெயில் நிறுவனத்துக்கு எரிவாயு குழாய் பதிக்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில், 7 மாவட்ட விவசாயிகள் சார்பிலும் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif