காரைக்கால் அருகே சிறுமியிடம் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் || karaikal child torture worker prison
Logo
சென்னை 06-03-2015 (வெள்ளிக்கிழமை)
காரைக்கால் அருகே சிறுமியிடம் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்
காரைக்கால் அருகே சிறுமியிடம் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்
காரைக்கால், ஜூலை. 31-

காரைக்கால், தலத்தெருபேட் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையன் மகன் அஞ்சான் என்கிற தட்சிணாமூர்த்தி (வயது 52). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்கள் ஒரு மகனும் உள்ளனர்.

அவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் முருகவேல். கூலித் தொழிலாளி. முருகவேலின் வீட்டில் டி.வி. இல்லாததால், அவரது மகள் 1-ம் வகுப்பு படித்து வந்த அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அஞ்சான் வீட்டிற்கு சென்று அவரது குழந்தைகளுடன் சேர்ந்து டி.வி. பார்ப்பது வழக்கம்.

அதுபோன்று அதே தெருவை சேர்ந்த மேலும் சில குழந்தைகளும் அஞ்சான் வீட்டில் டி.வி பார்க்க வருவார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 16.4.2007 அன்று பள்ளி விடுமுறை என்பதால் அனிதா, அஞ்சான் வீட்டிற்கு சென்று டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் அஞ்சானின் பிளஸ்-2 படித்து வந்த மகளும், அதே தெருவை சேர்ந்த மற்றொரு சிறுமியும் இருந்தனர்.

அப்பொழுது அடி பம்பில் தண்ணீர் அடிக்க வேண்டும், வா என்று அனிதாவை மட்டும் அஞ்சான், கொல்லைப் புறத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் அனிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்த அஞ்சான், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார், கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து அஞ்சானை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளி அஞ்சானுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேற்கொண்டு 2 மாதம் சிறைதண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி மார்க்கரெட் ரோசலின் தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பை தொடர்ந்து அஞ்சான் காரைக்கால் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் ஆஜரானார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

amarprakash160600.gif
amarprakash160600.gif