திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்ற கணவன் மனைவி கல்லால் அடித்து கொலை || unmarried birth child couple murder
Logo
சென்னை 06-10-2015 (செவ்வாய்க்கிழமை)
திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்ற கணவன்-மனைவி கல்லால் அடித்து கொலை
திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்ற கணவன்-மனைவி கல்லால் அடித்து கொலை
பமாகோ, ஜூலை. 31-

ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் அகுல்கோக் நகரை சேர்ந்த தம்பதிகள் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகளும் பிறந்தன. இதை அறிந்த தீவிரவாதிகள் தம்பதியை அகுல்கோக் நகரின் மையப் பகுதிக்கு துப்பாக்கி முனையில் அடித்து இழுத்து வந்தனர்.

பின்னர், 4 அடி தோண்டப்பட்ட குழிகளில் இறக்கி கழுத்து மட்டும் தெரியும்படி அவர்களை புதைத்தனர். பின்னர், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் அவர்களின் தலையில் கல்லால் அடித்தனர்.

இதனால் வலி தாங்காமல் கதறி துடித்த அந்த இளம் தம்பதி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் நெஞ்சம் பதறியது.

இப்பகுதி அல்கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. இனி இங்கு தொடர்ந்து குடியிருந்தால் நமக்கும் இதுபோன்ற கதிதான் ஏற்படும் என அஞ்சிய பலர் அங்கிருந்து வெளியேறினர். பக்கத்து நாடான அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

மத்திய தரைக் கடலில் 1800 லிபியா அகதிகள் மீட்பு

ரோம், அக். 6–மத்திய தரைக் கடலில் 1800 லிபியா அகதிகள் மீட்கப்பட்டனர். உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ....»

VanniarMatrimony_300x100px_2.gif