மத்திய மந்திரி சபை செப்டம்பரில் மாற்றம்: அமைச்சர் பொறுப்பு ஏற்க ராகுல் தயக்கம் || central cabinet change september minister post rahul
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
மத்திய மந்திரி சபை செப்டம்பரில் மாற்றம்: அமைச்சர் பொறுப்பு ஏற்க ராகுல் தயக்கம்
மத்திய மந்திரி சபை செப்டம்பரில் மாற்றம்: அமைச்சர் பொறுப்பு ஏற்க ராகுல் தயக்கம்
புதுடெல்லி, ஜூலை.31-

மத்திய நிதி மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி ஆகிவிட்டதால், அவர் வகித்து வந்த நிதி இலாகா காலியாக உள்ளது. ஏற்கனவே சில காபினெட் மந்திரியும், ராஜாங்க மந்திரிகளும் கூடுதல் இலாகாக்களை கவனித்து வருகிறார்கள்.

மந்திரிசபையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கூடுதல் இடங்களைக் கேட்டு வருகின்றன. சில மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளது. எனவே மந்திரிசபையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 7-ந் தேதி தொடங்க உள்ளதால் இன்னும் சில தினங்களில் மந்திரிசபை மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மத்திய உள்துறை மந்திரியாக உள்ள ப.சிதம்பரம் நிதிதுறைக்கு மாற்றப்படுவது உறுதியாகி விட்டது. மின்துறை மந்திரியாக இருக்கும் சுசீல்குமார் ஷிண்டே உள்துறைக்கு மாற்றப்படுவார் என்று தெரியவந்துள்ளது. மற்றொரு கேபினட் மந்திரி மின்சார இலாகாவுக்கு மாற்றப்படக்கூடும்.

இதன் காரணமாக கேபினட் அந்தஸ்து வகிக்கும் மூத்த மந்திரிகள் சிலரது இலாகா மாறும். இதற்காக பதவி ஏற்பு விழா நடத்த வேண்டியதில்லை. கேபினட் இலாகா மாற்றம் மட்டுமே நடத்தப்பட்டால் அதை அறிக்கை மூலம் செய்துவிட முடியும் என்று கூறப்படுகிறது.

சில தினங்களில் மூத்த மந்திரிகள் இலாகா மாற்றமும், சுசீல்குமார் ஷிண்டேயை அவை முன்னவராக்கும் அறிவிப்பும் வெளியாகலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் மந்திரிசபை மாற்றம் (செப்டம்பர்) மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படலாம் என்று மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது.

ஒன்று துணை ஜனாதிபதி தேர்தல் வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளதால், அந்த சமயத்தில் மந்திரிசபையை மாற்றி அதன் மூலம் தோழமை கட்சிகளிடம் ஏதாவது அதிருப்தியை சந்தித்து விடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

மற்றொன்று ராகுல்காந்தி மந்திரிசபையில் சேர ஆர்வம் காட்டாமல் இருப்பதால் ஏற்பட்டுள்ள தாமதாகும். ராகுல்காந்திக்கு மத்திய மந்திரிசபையில் மிக முக்கிய இலாகா ஒன்றை கொடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங்கும், சோனியாகாந்தியும் விரும்புகிறார்கள். இப்போதே மந்திரி பணியில் தேர்ச்சிப் பெற்றால்தான் 2014-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் என்று ராகுலை முன்நிறுத்த முடியும் என்று சோனியா கருதுகிறார்.

ஆனால் ராகுல்காந்திக்கு மந்திரி பதவி ஏற்க விருப்பம் இல்லை. மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டால், அது தன் செயல்பாடுகளையும் கட்சிப்பணிகளையும் கட்டிப்போட்டு விடும் என்று அவர் கருதுவதாக தெரிகிறது.

ராகுல் தயக்கம் காரணமாக காங்கிரசில் உள்ள இளம் தலைவர்களும் முக்கிய இலாகாக்களை பெறுவதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலை மந்திரிசபை மாற்றத்துக்கு ஒத்து வராவிட்டால் பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகே மந்திரி சபை மாற்றம் நடைபெறும்.

எனவே செப்டம்பர் மாதம் 7-ந் தேதிக்கு பிறகே மந்திரிசபை மாற்றம் பெரிய அளவில் நிகழும் என்று தெரிகிறது. மந்திரிசபை மாற்றத்தின் போது, சில புதுமுகங்கள் இடம் பெறக்கூடும். நிதி மந்திரியாக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி பொறுப்பு ஏற்க கூடும் என்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ஆகிவிட்டதால் மந்திரிசபையில் மேற்கு வங்கத்துக்குரிய பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. அதற்காக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர் கேபினட் மந்திரி ஆக்கப்படலாம்.

கமல்நாத், ஜெயபால் ரெட்டி ஆகியோரது இலாகா மாற உள்ளது. அதுபோல தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சி எம்.பி.க்களுக்கும் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மேற்கு வங்காளத்தில் லாரிகளுக்கு இடையே ரிக்‌ஷா சிக்கி விபத்து: 7 பேர் பலி

மேற்கு வங்காள மாநிலத்தில் ரிக்‌ஷா வண்டி, இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 7 ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif