அன்னா ஹசாரே குழுவினர் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது: மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி || anna hazare team involve violence is not a correct one narayanasami interview
Logo
சென்னை 22-12-2014 (திங்கட்கிழமை)
அன்னா ஹசாரே குழுவினர் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது: மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி
அன்னா ஹசாரே குழுவினர் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது: மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி
ஆலந்தூர், ஜூலை.31-
 
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை விமானம் மூலமாக மத்திய மந்திரி நாராயணசாமி புறப்பட்டு சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி செய்வதற்கு அணு உலைகள் தயார் நிலையில் உள்ளன. அணுமின் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பாதுகாப்பு கமிட்டி கடந்த 1 1/2 மாதங்களாக விரிவாக ஆய்வு செய்து வருகின்றது.
 
இந்த கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் வழங்க வேண்டும். அறிக்கை கிடைத்த 20 நாளில் கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும். ஆகஸ்டு மாதம் 25-ந் தேதிக்குள் மின்சார உற்பத்தி பணி தொடங்கப்படும்.
 
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ஆர்வமாக உள்ளார். ஆனால், இந்த மசோதாவில் சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் சில திருத்தங்களை தந்து உள்ளன. அதேநேரத்தில், மத்திய அரசு தான் காலதாமதம் செய்து வருவதாக பிரசாரம் செய்வது சரியல்ல.
 
அன்னாஹசாரே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார். அவரை எதிர்கட்சிகள் தூண்டி வருகின்றன. காந்தி வழியில் போராட்டம் என கூறிவிட்டு பிரதமர், உள்துறை மந்திரி வீடுகள் முன் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
 
சென்னையில் அன்னா ஹசாரே குழுவினர் நடத்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்ப்பர்க்கிறோம்.
 
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை

காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இரு மாநிலங்களிலும் முதல் கட்ட ....»