குஜராத் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் என அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு || 22 person criminal in gujarat riot case ahamadabed court judgement
Logo
சென்னை 10-07-2014 (வியாழக்கிழமை)
  • புனே போலீஸ் நிலையம் அருகே குண்டு வெடிப்பு: இரண்டு பேர் காயம்
  • ஏழைகளுக்கு உதவாத மத்திய பட்ஜெட்: காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்: ஜெயலலிதா வரவேற்பு
  • மக்களின் நம்பிக்கையை பெரும் விதத்தில் உள்ளது பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு
  • பஞ்சாப் முதல் மந்திரி பாதல் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்
குஜராத் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் என அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
குஜராத் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் என அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
அகமதாபாத்,ஜூலை.31-
 
2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் மெஹ்சனா மாவட்டத்தின் திப்தா தர்வாஜா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
 
இதுகுறித்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ, 3 பெண்கள் உள்ளிட்ட 83 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குஜராத் கலவர வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கிய அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் 22 பேர் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளித்தது.
 
அதேசமயம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாரதிய ஜனதா எம்.எல்.ஏ உள்ளிட்ட 61 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.சி. ஸ்ரீவத்சவா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
 
இதற்கிடையே கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில், சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை சீரமைக்க வேண்டும் என்ற குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பெற்றோர் எதிர்ப்பால் இளம் காதல் ஜோடி தற்கொலை

கான்பூரில் பெற்றோர்கள் தங்களது காதலை ஏற்றுகொள்ள மறுத்ததால் இளம் ஜோடி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். கான்பூரில் உள்ள ....»