அலெப்போவை மீண்டும் வசப்படுத்தியது சிரியா ராணுவம்: 2 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் || 2 lakhs Asylum neighbouring countries in syria
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • மீனவருக்கு தூக்கு தண்டனை: சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டது
அலெப்போவை மீண்டும் வசப்படுத்தியது சிரியா ராணுவம்: 2 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்
அலெப்போவை மீண்டும் வசப்படுத்தியது சிரியா ராணுவம்: 2 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்
டமாஸ்கஸ்,ஜூலை.31-
 
சிரியாவின் அலெப்போ மாவட்டத்தில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடப்பதால், இரண்டு லட்சம் பேர் ஊரை காலி செய்து விட்டு, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
 
அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலகக் கோரி சிரியாவில் போராடிவரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், இதுவரை 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
 
தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
 
இந்நிலையில் சிரியாவின் பாரம்பரிய மாவட்டமான அலெப்போவை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசப்படுத்தியிருந்தனர். அங்கிருந்து அவர்களை விரட்டியடிக்க, சிரியா ராணுவம் இப்பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
 
இதற்கு கிளர்ச்சியாளர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அலெப்போ மாவட்டத்தில் உள்ள சலாஹிதீன் பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்களை விரட்டி விட்டதாகவும், தற்போது இந்த மாவட்டம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சிரியா ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அலெப்போவின் மற்ற பகுதிகளில் கிளர்ச்சி படையைச் சேர்ந்த பலர், துப்பாக்கிகளுடன் உலாவிக் கொண்டிருக்கின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சண்டை நீடிப்பதால், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். உயிருக்கு பயந்து இரண்டு லட்சம் பேர், துருக்கி மற்றும் ஜோர்டான் நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
 
சிரியாவிலிருந்து வருபவர்களுக்காக ஜோர்டான் அரசு, ஒன்றரை லட்சம் பேர் தங்கும் அளவுக்கு அகதிகள் முகாமை தயார்படுத்தியுள்ளது. அலெப்போவில் சண்டை நீடிப்பதால் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சொந்த மக்களையே கொன்று குவிக்கும் சிரியா அரசுக்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சிங்கப்பூரில் சக ஊழியருக்கு கத்திக்குத்து: இந்தியருக்கு 1½ ஆண்டு சிறை

சிங்கப்பூரில் வசித்து வந்தவர் சார்லஸ் ஐசக் சத்தியநாதன் (வயது 47). இந்தியரான இவர் அங்கு கடந்த ....»