ஒலிம்பிக்: பூபதி போபண்ணா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு தகுதி || london olympics Mahesh Bhupathi and Rohan Bopanna qualifies second round
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
ஒலிம்பிக்: பூபதி-போபண்ணா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு தகுதி
ஒலிம்பிக்: பூபதி-போபண்ணா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு தகுதி
லண்டன்,ஜூலை.31-
 
லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் விளையாட இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
 
நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் பெலாரஸ் நாட்டின் மேக்ஸ் மிர்னியி-அலெக்சாண்டர் பரி ஜோடியை, இந்திய ஜோடி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் இரு ஜோடிகளும் கடுமையாக மோதிக்கொண்டன.
 
முதல் செட்டை 7-6 என டைபிரேக்கரில் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 6-7 என இழந்தது. விறுவிறுப்பாக நடந்த மூன்றாவது மற்றும் கடைசி செட்டை இந்திய ஜோடி 8-6 என கைப்பற்றி போட்டியை வென்றது.
 
பூபதி-போபண்ணா ஜோடி தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில், பிரான்ஸ் நாட்டின் கேஸ்கெட்-பென்னட்டியூ ஜோடியை எதிர்கொள்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்