ஆதரவாளர்கள் வருவர்களா?: பயத்தில் இருக்கிறார் அன்னா ஹசாரே சல்மான் குர்ஷித் || anna hazare be fear say salman kurshid
Logo
சென்னை 30-09-2014 (செவ்வாய்க்கிழமை)
  • படகுப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் வர்ஷா-ஐஸ்வர்யா வெண்கலம் வென்றனர்
  • ஆசிய விளையாட்டு: இந்திய ஆடவர் ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
  • ஆசிய விளையாட்டு: இந்திய கபடி அணி பாகிஸ்தானை வீழ்த்தியது
ஆதரவாளர்கள் வருவர்களா?: பயத்தில் இருக்கிறார் அன்னா ஹசாரே-சல்மான் குர்ஷித்
ஆதரவாளர்கள் வருவர்களா?: பயத்தில் இருக்கிறார் அன்னா ஹசாரே-சல்மான் குர்ஷித்
புதுடெல்லி,ஜூலை 30-
 
அன்னா ஹசாரே விருப்பத்திற்காக மிகவும் சிக்கலான அந்த லோக்பால் சட்டம் குறித்த மூன்று நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்கனவே ஏற்று இருக்கிறது என்றும், கூட்டம் வராத நிலையில் அவர் பயந்திருக்கிறார் என்றும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
 
நான் முன்னதாக அரசின் பிரதிநிதி என்ற முறையில் இல்லாமல் ஒரு சாதாரண குடிமகன் என்ற முறையில் ஹசாரேவை சந்தித்து இருக்கிறேன். அப்போது இந்த அவசியமற்ற, ஆதாரமற்ற இந்த லோக்பால் சட்ட விஷயத்தை கைவிடக்கோரி அவருடன் பேசியிருக்கிறேன்.
 
இதை முதல்முறையாக அன்னா ஹசாரேவே சமீபத்தில் இச்சந்திப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த நிபந்தனைகளை முன்பே நாங்கள் சந்தித்து உள்ளோம் என்று  நினைக்கிறோம். லோக்பால் குறித்த விசயத்தில் அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மாநிலங்களில் லோக் ஆயுக்தா உருவாக்கம் பற்றியும் பேசப்பட்டு வந்திருக்கிறது.
 
எனவே முதலில் குரூப் ஏ குரூப் பி அரசு ஊழியர்களை லோக்பால் சட்டத்திற்குள் கொண்டுவர அரசு விரும்பியது. பின்னர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் ஒப்படைக்க இருந்தது. அதன் பிறகு நிபந்தனையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரு பொதுமன்ற நீதிபதியிடம் ஒப்படைக்க இருந்தோம்.
 
மூன்றாவது விசயமாக பொதுமக்கள் சம்மதம் பெறவேண்டும் என்றும், நாங்கள் அதை மக்கள் குறைதீர் சட்டத்தில் வைத்துள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

திருப்பதி கோவிலில் நெரிசலில் சிக்கி பெண்கள் காயம்

நகரி, செப். 30–திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 26–ந் தேதி தொடங்கியது. முதல் 2 ....»

160x600.gif
160x600.gif