டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களை முடக்கிய மின்தடை சீரானது || delhi include 7 state disabling transister smooth
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களை முடக்கிய மின்தடை சீரானது
டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களை முடக்கிய மின்தடை சீரானது
புதுடெல்லி, ஜூலை 30-
 
வடமாநிலங்களுக்கு செல்லும் மத்திய மின்வழித்தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லி, பஞ்சாப், உள்ளிட்ட 8 மாநிலங்களில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் மின்சாரம் தடைபட்டது, இதனால் டெல்லி, பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய வடமாநிலங்கள் இருளில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்தது.
 
ஆக்ரா அருகே மின்பாதையில் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அங்கு சென்றுள்ள மின்துறை அதிகாரிகள் இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சரி செய்துவிடுவார்கள் என்றும் மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.
 
இந்த திடீர் மின்தடையால் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 300 ரயில்கள் இயக்கப்படாததால் காலையில் பணிக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் மின்வழித்தடங்கள் சரிசெய்யப்பட்டு, காலை 8.45 மணிக்குப் பிறகு ரயில்கள் இயங்க ஆரம்பித்தன.  பிற்பகல் 80 சதவீத இடங்களுக்கு மின்சப்ளை கொடுக்கப்பட்டது.
 
இதேபோல் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் 9 மணிக்குள் மின்விநியோகம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் மற்ற பகுதிகளுக்கும் படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் பிற்பகல் ஓரளவு நிலைமை சீரடைந்தது.
 
கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்குப் பிறகு அனைத்து கோளாறுகளும் சரிசெய்யப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் மின்விநியோகம் தொடங்கியதாக, பவர்கிரிட் கார்ப்பரேசன் அதிகாரி ஆர்.என்.நாயக் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்துடன் பாடகர் கோவன் சந்திப்பு

கோயம்பேடு, நவ. 28–கலை இலக்கிய கழக பாடகர் கோவன். இவர் மதுவிலக்கை ஆதரித்து பாடல்கள் எழுதி ....»