திருச்சியில் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது || thiruchi loan discount semi nude struggle farmers arrest
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
திருச்சியில் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது
திருச்சியில் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது
திருச்சி, ஜூலை. 30-    
 
தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சார்பில் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், உர விலையை குறைக்க வேண்டும், ஒகேனக்கல்-அய்யாறு வெள்ள நீர் கால்வாய் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
அதன்படி இன்று பாரதீய கிசான் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அன்பில் அன்பழகன், வைத்தியநாதன், வீரசேகரன், ராமன் முன்னிலையில் திரளான விவசாயிகள் திருச்சி வெஸ்ட்ரி ரவுண்டானா அருகே திரண்டனர்.  
 
அவர்கள் வேட்டி மட்டும் அணிந்து அரை நிர்வாணமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். உடனே போலீஸ் துணை கமிஷனர் காந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் சிகாமணி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் குமார், மற்றும் போலீசார் 25 பெண்கள் உள்பட 428 விவசாயிகளை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருச்சி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif