கொடைக்கானலில் ரூ.35 கோடி செலவில் ரோப்கார் அமைக்க திட்டம்: நகரசபை கூட்டத்தில் தீர்மானம் || kodaicanel roof car scheme municipal meeting
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
கொடைக்கானலில் ரூ.35 கோடி செலவில் ரோப்கார் அமைக்க திட்டம்: நகரசபை கூட்டத்தில் தீர்மானம்
கொடைக்கானலில் ரூ.35 கோடி செலவில் ரோப்கார் அமைக்க திட்டம்: நகரசபை கூட்டத்தில் தீர்மானம்
கொடைக்கானல், ஜூலை 30-

கொடைக்கானல் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் வி.எஸ்.கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எட்வர்டு முன்னிலை வகித்தார். ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நகரசபை தலைவர் வி.எஸ்.கோவிந்தன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதுபற்றி அவர் பேசும்போது, கொடைக்கானல் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு நகர்மன்ற தலைவரின் கோரிக்கையை ஏற்று கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 2 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்க சம்மதம் தெரிவித்த தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள் குறித்த விவரம் வருமாறு:-

கொடைக்கானல் நகரில் பிற்பட்ட பகுதிகள் மானிய திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சத்தில் சிமெண்டு சாலைகள் மற்றும் பாலம் அமைப்பது, பொதுநிதியின் கீழ் 32 லட்சம் ரூபாயில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளவும், சுங்க நிதியின் கீழ் 75 லட்சம் ரூபாய் செலவில் தார்ச்சாலை சீரமைப்பு செய்தல், வழிகாட்டி பலகைகள் அமைத்தல், தடுப்புச்சுவர் அமைத்தல், வெள்ள நீர் வீழ்ச்சி, படகு குழாம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் நகராட்சி அலுவலகம் முதல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் வரை ரோப்கார் அமைக்க ரூ.35 கோடியில் திட்டம் தயார் செய்து சுற்றுலா வளர்ச்சி நிதி மூலம் செயல்படுத்த மாவட்ட கலெக்டருக்கு அனுமதி கேட்டு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

சுற்றுலா வளர்ச்சி நிதி மூலம் கோக்கர்ஸ் வாக் பகுதியில் நவீன கழிப்பறை அமைக்க ரூ.8 லட்சம், ஏரிச்சாலையில் 4 இடங்களில் நவீன கழிப்பறைகள் அமைக்க ரூ.11 லட்சம், ஏரியில் நீராதாரங்களை மேம்படுத்த ரூ.10 லட்சம், ஏரியை அழகுபடுத்த ரூ.45 லட்சம் உள்பட ரூ.99 லட்சத்துக்கு திட்டம் தயாரித்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்புவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடிக்கு திட்டம் தயாரித்து அனுப்புவதுடன், குடிநீர் மேம்பாடு பணியின் மூலம் செல்வபுரம் பகுதியில் தடுப்பணை கட்ட ரூ.50 லட்சத்தில் திட்டம் தயாரித்து அனுப்புவது, நகரில் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் நகரமைப்பு அதிகாரி பெரியசாமி உள்பட அதிகாரிகள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொறியாளர் முகமது சாகுல் அமீது நன்றி கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திண்டுக்கல்

section1

கொடைக்கானல் அருகே பாலம் இல்லாததால் கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் கிராம மக்கள்

பெரும்பாறை, நவ. 25–கொடைக்கானல் அருகே ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் கயிறு கட்டி பொதுமக்கள் நடந்து ....»