சிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உலக நாடுகளிடம் புரட்சி படை கோரிக்கை || syria military war weapons world countries
Logo
சென்னை 02-09-2015 (புதன்கிழமை)
சிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உலக நாடுகளிடம் புரட்சி படை கோரிக்கை
சிரியாவில் ராணுவத்துடன் போரிட  ஆயுதம் கொடுங்கள்: உலக நாடுகளிடம் புரட்சி படை கோரிக்கை
டமாஸ்கஸ்,ஜூலை. 30-

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக 1 1/2 வருடத்துக்கும் மேலாக போராட்டம் நடக்கிறது. மக்களுக்கு ஆதரவாக புரட்சி படை களம் இறங்கியுள்ளது. இதனால் ராணுத்துக்கும், புரட்சி படைக்கும் ஏற்படும் மோதலில் இதுவரை 19 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி பலிக்கவில்லை. தற்போது புரட்சி படையின் கை ஓங்கி உள்ளது. எல்லையோரம் உள்ள நகரங்களும், முக்கிய வர்த்தக நகரமான அலெப்போவும் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

எனவே அலெப்போவை தங்கள் கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டுவர புரட்சி படையுடன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. அதற்காக டாங்கிகள், ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி குண்டு மழை பொழிந்து வருகின்றது. இதனால் ஏராளமான மக்கள் செத்து மடிகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் சிரியா தேசிய கவுன்சில் தலைவர் அப்துல் பகத் சீதா நிருர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அலெப்போ நகரை மீட்கவும், போராட்டக்காரர்களை ஒடுக்கவும் அதிபர் ஆசாத் கடுமையான ஆயு தங்களை பயன்படுத்தி வருகிறார். டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் எங்களிடம் இல்லை. எனவே அவற்றை எதிர்த்து போரிடும் வகையில் எங்களுக்கு உலக நாடுகள் சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொடுத்து உதவுங்கள் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் அவர் கூறும்போது, ஆசாத்தை பதவி நீக்கம் செய்து விட்டு மாற்றாக புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது என்றும் அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

உயிரை குடித்த செல்பி மோகம்: அமெரிக்க வாலிபர் துப்பாக்கி குண்டு பாய்ந்து தற்கொலை

குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் செல்பி மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த 19 வயது அமெரிக்க வாலிபர் ....»