நாங்குநேரி துப்பாக்கிசூட்டில் வாலிபர் பலி: வைகோ தலைமையில் இன்று உண்ணாவிரதம் || nanguneri gun shooting man dead vaiko demonstration
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
  • ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று அனைத்து மாநில கவர்னர்கள் கருத்தரங்கம்
  • திருப்பூர்: பல்லடம் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி
நாங்குநேரி துப்பாக்கிசூட்டில் வாலிபர் பலி: வைகோ தலைமையில் இன்று உண்ணாவிரதம்
நாங்குநேரி துப்பாக்கிசூட்டில் வாலிபர் பலி: வைகோ தலைமையில் இன்று உண்ணாவிரதம்
நாங்குநேரி, ஜூலை.30-

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேஉள்ள மறுகால்குறிச்சி கிராமத்தில் குளத்துமண் அள்ளுவது தொடர்பாக இருதரப் பினரிடையே பிரச்சினை இருந்துவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் கடந்த24-ந்தேதி மறுகால்குறிச்சி கிராமத்திற்கு சென்றனர். அப்போது வானுமாமலை என்ற வாலிபருக்கும், இன்ஸ்பெக்டருக்கும் கடும் வாக்குவாதம்ஏற்பட்டது. அந்த நேரத்தில் மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சிலர் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் வாலிபர் வானுமாமலை குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தால் மறுகால் குறிச்சி கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது. 2நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன. துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நாங்குநேரி மாஜிஸ்திரேட்டு சுந்தர் ராஜன் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது மட்டுமின்றி, சஸ்பெண்டும் செய்யப்பட்டார். மேலும் இன்ஸ்பெக்டருடன் மறுகால்குறிச்சி கிராமத்திற்கு சென்ற போலீசார் இப்ராகிம், செல்வின் செல்வகுமார் ஆகியோரும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்கள்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மீது கொலை வழக்கு பதிந்து, அவரை கைதுசெய்ய வலியுறுத்தி மறுகால்குறிச்சி கிராமமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாங்குநேரி தாசில்தார் அலுவலகம்முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு, ம.தி.மு.க. மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம், மாவட்ட செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சண்முகவேல், ம.தி.மு.க. நகர செயலாளர் அருணாசலம், ஒன்றிய செயலாளர் துரைசாமி, பா.ஜ.க. ஒன்றிய தலைவர் மகாகண்ணன்,தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் மைதீன் பாரூக் மற்றும் பல்வேறு கட்சியினரும், மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோரும் கலந்துகொண்டனர்.

போராட்டம் நடந்த இடத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif