பாகிஸ்தானில் ரம்ஜான் நோன்பின்போது குளிர்பானம் குடித்த 2 பேர் கைது || pakistan ramjan fasting cool drinks drink persons arrest
Logo
சென்னை 26-11-2014 (புதன்கிழமை)
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
  • சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 24 பேர் பலி
  • புதுச்சேரியில் பால்விலை ரூ.10 உயர்வு: நாளை முதல் அமல்
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
பாகிஸ்தானில் ரம்ஜான் நோன்பின்போது குளிர்பானம் குடித்த 2 பேர் கைது
பாகிஸ்தானில் ரம்ஜான் நோன்பின்போது குளிர்பானம் குடித்த 2 பேர் கைது
இஸ்லாமாபாத், ஜூலை.30-

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர்கள் அன்வர் அப்பாஸ், மாலிக் சயீத். இவர்கள் 2 பேரும் இஸ்லாமாபாத் அருகே உள்ள தமன்-இ-கோ என்ற இடத்துக்கு காரில் சுற்றுலா சென்று இருந்தனர்.

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது நோன்பு இருப்பவர்கள் முன்பு, உணவு பொருள் சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ கூடாது என்பன போன்றவை அடங்கிய ரம்ஜான் சட்டம் அமலில் உள்ளது.

மதிய வேளையில் காரில் சென்ற அவர்கள் ஆட்கள் யாரும் இல்லாத இடத்துக்கு சென்று குளிர்பானம் குடித்தனர். அப்போது அங்கு திடீரென வந்த ஒரு போலீஸ்காரர் இதைப் பார்த்து விட்டார்.

நீங்கள் ரம்ஜான் சட்டத்தை மீறி விட்டீர்கள் என கூறி அவர்கள் இருவரையும் கைது செய்தார். அப்போது அன்வார் அப்பாசும், மாலிக் சயீத்தும் அவரிடம் நாங்கள் தற்போது நோன்பு இருக்கவில்லை. எனவே நாங்கள் சாப்பிடுவதையோ, குளிர்பானம் அருந்துவதையோ உங்களால் தடுக்க முடியாது. அது உங்கள் வேலையும் இல்லை என்றார்.

உடனே, அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை போலீசார் அடித்து உதைத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீஸ் தலைமை அதிகாரி பானி யாமினிடம் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

மத அவமதிப்பு வழக்கு: நடிகை வீணா மாலிக்–கணவருக்கு 26 ஆண்டு ஜெயில்

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண போட்டோ விவகாரத்தில் சர்ச்சையில் ....»