காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா தி.மு.க. ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் கருணாநிதி அறிக்கை || silk park scheme started in dmk ruling karunanidhi statement
Logo
சென்னை 26-11-2014 (புதன்கிழமை)
  • ம.தி.மு.க.வின் சென்னை பொதுக்கூட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
  • இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டு வங்கிகளில் 427 வங்கி கணக்குகள் உள்ளன: அருண்ஜெட்லி
  • ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கோவா 3-0 என கேரளாவை வீழ்த்தியது
காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா தி.மு.க. ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்-கருணாநிதி அறிக்கை
காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா தி.மு.க. ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்-கருணாநிதி அறிக்கை
சென்னை, ஜூலை.30-
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கேள்வி:-காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா ரூ.83 கோடியில் அமைக்க ஜெயலலிதா உத்தரவு என்று கொட்டை எழுத்துக்களில் அனைத்து நாளேடுகளிலும் ஒரு அறிவிப்பு வந்துள்ளதே?
 
பதில்:-தி.மு.க. சார்பில் 26-9-2009 அன்று காஞ்சீபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு நான் உரையாற்றும் போதுதான் இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் பட்டு உற்பத்தி, சாயம் போடுதல், விற்பனை மையம் ஆகியவை அனைத்தையும் உள்ளடக்கிய பட்டுத் தொழில் பூங்கா காஞ்சீபுரத்தில் அமைக்கப்படும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தம்பி தயாநிதிமாறன் அறிவித்துள்ளதற்கிணங்க நெசவாளர் சமுதாயம் நிறைந்து வாழ்ந்த இந்தத் திருநகரில் மிகப்பெரிய பட்டுத்தொழில் பூங்கா ஒன்று 40 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதி களோடு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தேன்.
 
அத்துடன் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா நினைவாக காஞ்சீபுரம் நகர வளர்ச்சிக்காகவும், நகரை அழகுபடுத்தவும் இருபது கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தேன்.
 
இந்த இருபது கோடி ரூபாய்க்கான வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் தி.மு.கழக ஆட்சியிலேயே செய்து முடிக்கப்பட்டு, 12-2-2011 அன்று துணை முதல்-அமைச்சர் தம்பி மு.க.ஸ்டாலின் அவற்றை திறந்து வைத்துள்ளார்.
 
பட்டுத்தொழில் பூங்கா மட்டும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக தாமதப்பட்டது. உண்மையில் இந்த திட்டம் மத்திய அரசின் ஜவுளித்துறையின் ஒருங்கிணைந்த திட்டம். இதில் மத்திய அரசின் பங்கு 40 விழுக்காடு-33.53 கோடி ரூபாய். தமிழக அரசின் பங்கு 9 விழுக்காடு-7.54 கோடி ரூபாய். பட்டுச்சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டு நூல் சாயமிடும் தொழில் அதிபர்கள் பங்கு 51 விழுக்காடு-42.76 கோடி ரூபாய். மொத்தம் 83.83 கோடி.ஆனால் ஜெயலலிதா அறிக்கையில் இது மத்திய அரசு திட்டம் என்பதே அடியோடு மறைக்கப்பட்டு, 83 கோடி ரூபாயில் அமைக்க ஜெயலலிதா உத்தரவு என்ற தலைப்பில் மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்போகிறது என்பதையோ, உற்பத்தியாளர்களும், தொழில் அதிபர்களும் எவ்வளவு முதலீடு செய்யப்போகிறார்கள் என்பதையோ அப்படியே மறைத்து விட்டு அறிக்கை கொடுத்துள்ளார்.
 
முதலீட்டாளர்கள் பணம் செலுத்துவதில் தாமதம் ஆவதும் இந்த பூங்கா அமைய தாமதமாவதற்கான ஒரு காரணமாகும். மேலும் ஜெயலலிதாவின் அறிக்கையில் காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் 75 ஏக்கர் அரசு நிலத்தில் அண்ணா கைத்தறி பட்டுப்பூங்கா அமைப்பதற்கு ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
 
ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே காஞ்சீபுரம் வட்டம், கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் காஞ்சீபுரம் சாலையையட்டி 75 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, இந்தப்புற வழிச்சாலை கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
கழக ஆட்சியிலேயே தொடர்ந்து பல ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்த பணிகளை செய்ய என்.வி.ராஜேஷ் என்ற பட்டு ஜவுளி உற்பத்தியாளரை நிர்வாக இயக்குநராக கொண்ட நிர்வாகக்குழுவும் அமைக்கப்பட்டு, இந்த பட்டு பூங்காவிற்கான பூர்வாங்க பணிகளை செய்து வந்தனர்.
 
அதுமாத்திரமல்ல பட்டுப்பூங்காவின் அன்றாட அலுவல்களை பார்ப்பதற்காக 41, தும்பவனம் தெரு, காஞ்சிபுரம் என்ற முகவரியில் இப்போதும் பட்டுப் பூங்காவின் நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது.கையகப்படுத்தப்பட்ட நிலம் புஞ்சை அனாதீனம் என்ற வகைப்பாட்டில் இருந்ததால் நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதற்குள் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டது.
 
தி.மு.க. ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதால், கடந்த பதினைந்து மாதங்களாக இத் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியினர் கிடப்பிலே போட்டுவிட்டு, தற்போது மத்திய அரசே இத்திட்டத்தை விரைவுபடுத்த சொன்ன பிறகு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தை, ஜெயலலிதா, அவர் புதிதாக அறிவிக்கின்ற திட்டத்தைப்போல அறிவித்திருக்கிறார்.
 
கேள்வி:-இந்த ஆட்சியில் விலைவாசி பற்றி?
 
பதில்:-அதையும் பத்திரிகையில் வந்த செய்தியை வைத்தே சொல்கிறேன். துவரம் பருப்பு கடந்த மாதம் கிலோ ரூ.70-க்கு கிடைத்தது. ஆனால் இப்போது மளிகை கடைகளில் கிலோ ரூ.90-க்கு விற்கிறார்கள். கடலைப்பருப்பு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது, இப்போது ரூ.80 ஆக விலை உயர்ந்து விட்டது. உளுத்தம் பருப்பு கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.75 ஆக விலை அதிகரித்து விட்டது. பச்சை பருப்பு கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.90 ஆக விலை அதிகரித்துள்ளது.
 
சிறிய வெங்காயம் இதற்கு முன்பு கடைகளில் கிலோ ரூ.20-க்கு கிடைத்தது. ஆனால் இன்று சில்லரை மளிகை கடைகளில் 1 கிலோ சிறிய வெங்காயம் 50-ரூபாய் க்கு விற்கப்படுகிறது.
 
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.30 கொடுத்து சிறிய வெங்காயம் வாங்கிச்செல்கிறார்கள். சுமாரான வெங்காயத்தை சில்லரை கடைகளில் ரூ.40-க்கும், நல்ல முதல் ரக சிறிய வெங்காயத்தை கிலோ ரூ.50-க்கும் விற்கிறார்கள்.
 
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் நடிகை குஷ்பு

தி.மு.க.வில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் விலகிய நடிகை குஷ்பு, இன்று டெல்லியில் காங்கிரஸ் ....»