சினிமாவை போல் துரத்திய கும்பலிடம் தப்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் || Chased the gang escaped in love with cinema as a pair the defense asked for asylum at the police
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
சினிமாவை போல் துரத்திய கும்பலிடம் தப்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
சினிமாவை போல் துரத்திய கும்பலிடம் தப்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
திருச்சி, ஜூலை. 29-

திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (22). இவர் திருவானைக்காவலில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப் யூட்டர் பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே கல்லூரியில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அழகண்ட நல்லூரை சேர்ந்த சிந்துஜா (20) என்ற மாணவியும் படித்தார். உயிர் வேறு, சாதி வேறு என்றாலும் காதலுக்கு கண் இல்லை என்பது போல மனோஜ்குமாரும், சிந்துஜா‘வும் பார்த்தவுடன் காதல் வலையில் விழுந்தனர்.

படிப்புடன் காதலையும் வளர்த்தனர். இவர்கள் காதல் சிந்துஜா வின் பெற்றோருக்கு பிடிக்க வில்லை. எனவே சிந்துஜாவை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று விட்டனர். எனவே, காதலியை பார்க்க முடியாமல் வரகனேரியில் மனோஜ் குமார் வாடினார். இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி சிந்துஜா வீட்டு சிறையை உடைத்து கொண்டு தப்பினார். காதலனுடன் திருச்சிக்கு வந்து விட்டார். சிந்துஜாவை காணாமல் திடுக்கிட்ட அவரது அண்ணன் அங்கு போலீஸ் நிலையத்தில் தன் தங்கை கடத்தப்பட்டதாக புகார் கூறினார்.

இதைத்தொடர்ந்து சிந்துஜாவை போலீசாரும் மறுபுறம் உறவினர்கள், நண்பர்களுடன் தேடினர். திருச்சியில் மனோஜ் குமார் வீடு அவரது நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடினர். 2 நாட்களாக இவர்களிடம் சிக்காமல் பல பகுதிகளில் சுற்றிய காதல் ஜோடி கும்பலிடம் பிடிபடாமல் ஓடியது. இதற்கிடையே இனியும் ஓடி ஓடியே கும்பலிடம் தப்ப முடியாது என முடிவு செய்து இன்று காலை காந்தி மார்க்கெட் போலீசில் மனோஜ்குமாரும், சிந்துஜா ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

அங்கு தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு சிந்துஜா புகார் கொடுத்தார். இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட போலீசார் சிந்துஜா கடத்தப்பட்டதாக அவரை தேடுவதால் திருச்சி போலீசில் தஞ்சம் அடைந்தது குறித்து தகவல் கொடுத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருச்சி

section1

சஸ்பெண்டு செய்யப்பட்டதால் நீதிபதி, மனைவியுடன் தற்கொலை முயற்சி: திருச்சி ஓட்டலில் விஷம் குடித்தனர்

சென்னை, பிப். 14–தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள செசன்ஸ் கோர்ட்டுகளில் பணிபுரியும் நீதிபதிகள் மீதான புகார்கள் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif