பாராளுமன்றத்தின் இருஅவைகள் சம்மதத்துடன் லோக்பால் மசோதா நிறைவேற்றத் தயார்: சல்மான் குர்ஷித் || Centre ready pass Lokpal Bill consensus Khurshid
Logo
சென்னை 22-10-2014 (புதன்கிழமை)
பாராளுமன்றத்தின் இருஅவைகள் சம்மதத்துடன் லோக்பால் மசோதா நிறைவேற்றத் தயார்: சல்மான் குர்ஷித்
பாராளுமன்றத்தின் இருஅவைகள் சம்மதத்துடன் லோக்பால் மசோதா நிறைவேற்றத் தயார்: சல்மான் குர்ஷித்
பருங்காபாத், ஜூலை. 29  -

ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரியும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர வலியுறுத்தியும் அன்னா ஹசாரே குழுவினர் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் கூறும்போது,

லோக்பால் சட்டம் போராட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட முடியாது. அது பாராளுமன்றத்தில் முழு சம்மதத்துடன் இயற்றப்பட வேண்டும். அதுகுறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ராஜ்ய சபாவில் ஜக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதற்கான முழுபலம் இல்லை என்ற உண்மையை அன்னா ஹசாரே அறியாதவராக உள்ளார்.

லோக்பால் மசோதாவை சட்டமாக இயற்றுவதில் அரசு அலட்சியம் காட்டி வருவதாக அன்னா ஹசாரே குழு கூறி வரும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அரசு எடுத்து வரும் நடவடிக்கையாலே லோக்சபாவில் இந்த சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேறியது.

இதுகுறித்து அவரிடம் ரகசிய பேச்சுவார்த்தையின் போது, அரசின் முயற்சிகள் குறித்து தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.  இந்த சந்திப்பு பற்றிய செய்தியை வெளியிடவேண்டும் என்ற அவரின் வேண்டுகோளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். மேலும், இந்த பிரச்சினை குறித்து போராட்டத்தை கைவிட அவரிடம் அப்போதே நான் அறிவுறுத்தி இருந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மேகாலயாவில் ஆறு உல்பா தீவிரவாதிகள் கைது: பிஸ்டல்கள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல்

மேகாலயாவில் ஆறு உல்பா தீவிரவாதிகள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். நேற்றிரவு தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif