தீவிரவாதிகளை கண்டுபிடிக்க நவீன விமான தொழில்நுட்பம் தேவை: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை || militant identify latest technology america pakistan
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
  • தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
  • மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவில் 48 மணி நேரத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி
தீவிரவாதிகளை கண்டுபிடிக்க நவீன விமான தொழில்நுட்பம் தேவை: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை
தீவிரவாதிகளை கண்டுபிடிக்க நவீன விமான தொழில்நுட்பம் தேவை: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை
வாஷிங்டன், ஜூலை, 29  -

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கப் படையினரால் 24 பாகிஸ்தான் இராணுவத்தினர் தவறுதலாக கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானிடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியது. இதுகுறித்து அமெரிக்காவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., லெப்டினன்ட் ஜெனரல் ஜாகில் உல் இஸ்லாம் ஆகஸ்ட் 1-ம் தேதி  மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

இந்தப் பயணத்தின் போது தீவிரவாதத்துக்கு எதிரான உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க புலனாய்வு மற்றும வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்பட மூத்த அரசியல் தலைவர்களையும் சந்தித்து வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் எல்லைப் பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் விமான ஏவுகணை தாக்குதலை நிறுத்துவது குறித்து பேசி முடிவெடுக்கப்படும். பாகிஸ்தானுக்கு எப்.16 ரக விமானங்களை அளிப்பதற்கும், புலனாய்வு உதவிகள் வழங்கவும் அமெரிக்காவிடம் கோரப்படும் எனவும் தெரிகிறது.

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியின் அமெரிக்கா பயணத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.ன் தலைவர் டேவிட் பெட்ராஸ் பாகிஸ்தான், ஆப்கான் எல்லையிலுள்ள வடமேற்கு பகுதிகளை பார்வையிட வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

அமெரிக்காவில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு விருது

வாஷிங்க்டன், அக்.23 உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில், மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif