வடகொரியாவில் வெள்ளம்: 88 பேர் பலி, 134 பேர் காயம் || flood south korea dead injury public
Logo
சென்னை 31-07-2014 (வியாழக்கிழமை)
  • ஈரோடு: மாணிக்கப்பாளையத்தில் உள்ள தனியார் நெய் குடோனில் தீவிபத்து
  • சென்னை: திமுக சார்பில் இன்று பொது கண்டனப்பொதுக்கூட்டம்
  • பெங்களூரில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை: நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று முழு அடைப்பு
  • அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று சுஷ்மாவுடன் சந்திப்பு
  • புதிய ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் இன்று பொறுப்பு ஏற்பு
வடகொரியாவில் வெள்ளம்: 88 பேர் பலி, 134 பேர் காயம்
வடகொரியாவில் வெள்ளம்: 88 பேர் பலி, 134 பேர் காயம்
பியாங்யாங், ஜூலை 29-

கடந்த சில நாட்களாக வடகொரியாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

மக்கள் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் பாய்ந்தது. அதன் காரணமாக தலைநகர் பியாங்யாங் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. ரோடுகளும், தெருக்களும், வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கி இதுவரை 88 பேர் பலியாகியுள்ளனர். 134 பேர் காயம் அடைந்துள்ளனர். 63 ஆயிரம் பேர் வீடுகள் இன்றி தவிக்கின்றனர். 12 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.

இவை தவிர 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. வீடுகளை இழந்த மக்கள் தங்க இடம் தேடி தவித்து வருகின்றனர். சுமார் 4,800 ஹெக்டேர் விளை நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

மழை வெள்ளம் காரணமாக வட கொரியாவில் 30 லட்சம் மக்கள் உணவின்றி தவிப்பதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

காஸா பள்ளி மீதான தாக்குதல் வெட்கக் கேடானது: இஸ்ரேலுக்கு பான் கி மூன் கண்டனம்

காஸா பகுதியில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் ஏவுகணைகள் ....»