சுரண்டை சப் இன்ஸ்பெக்ட்ரை கொன்ற ஏட்டு தற்கொலை செய்ததாக வதந்தி || surandai sub inspector muder case constable suicide rumor
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • மீனவருக்கு தூக்கு தண்டனை: சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • இந்திரா நினைவுநாள்: பிரதமர் மோடி இரங்கல்
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
சுரண்டை சப்-இன்ஸ்பெக்ட்ரை கொன்ற ஏட்டு தற்கொலை செய்ததாக வதந்தி
சுரண்டை சப்-இன்ஸ்பெக்ட்ரை கொன்ற ஏட்டு தற்கொலை செய்ததாக வதந்தி
நெல்லை, ஜூலை. 29-

சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி (வயது57). கடந்த 26-ந்தேதி ஏட்டு சண்முக ராஜ் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். சுரண்டை போலீஸ் நிலையத்தில் எழுத்தராக வேலை செய்த ஏட்டு சண்முகராஜ் சுத்தமல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி காரணம் என்று சந்தேகப்பட்ட சண்முகராஜ் இசக்கி தங்கியிருந்த அறைக்கு சென்று குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ஏட்டுவை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலை சம்பவம் எதிரொலியாக ஏட்டு சண்முகராஜை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஏட்டு சண்முகராஜின் பைக் செங்கோட்டை ஆத்தங்கரை தெருவில் அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கை போலீசார் கைப்பற்றினர். கொலை நடந்ததும் ஏட்டு சண்முகராஜ் பைக்கில் செங்கோட்டை வந்து ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து விட்டு தப்பியுள்ளார். அவர் கேரளா சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து கேரளாவுக்கு போலீஸ் தனிப்படை விரைந்துள்ளது.

மேலும் ஏட்டு சண்முகராஜ் மாறுவேடத்தில் பதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதனிடையே சென்னைக்கும் ஒரு தனிப்படை விரைந்துள்ளது. ஏட்டு சண்முகராஜின் சொந்த ஊரான ஆவுடையானூர் பகுதியிலும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் எஸ்.ஐ.யை கொன்ற ஏட்டு சண்முகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக நேற்று மாலை சுரண்டை பகுதியில் திடீரென வதந்தி பரவியது. இதனால் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டதோடு போலீசாரும்  அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

section1

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்: உதயகுமார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 213 வழக்குகளை அரசு ....»