சென்னை மாணவி பலி எதிரொலி: நெல்லை பள்ளி கல்லூரி வாகனங்கள் சோதனை || chennai student death affect nellai school college vehicles check
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
சென்னை மாணவி பலி எதிரொலி: நெல்லை பள்ளி-கல்லூரி வாகனங்கள் சோதனை
சென்னை மாணவி பலி எதிரொலி: நெல்லை பள்ளி-கல்லூரி வாகனங்கள் சோதனை
நெல்லை, ஜூலை. 29-

சென்னை தாம்பரத்தில் 2-ம் வகுப்பு மாணவி பஸ்சின் ஓட்டை வழியாக தவறி விழுந்து பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

விதிமுறையை பின்பற்றாத வாகனங்களின் உரிமையை ரத்து செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது சிறிய குறைபாடுகள் இருந்த 5 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் அந்த வாகனங்களின் குறைகளை சரி செய்து நாளை (திங்கட்கிழமை) மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. இதுபற்றி வட்டார போக்குவரத்து அதிகாரி முத்துசாமி கூறியதாவது:- பள்ளி, கல்லூரி வாகனங்களில் பிரேக் செக்-அப், பஸ்களில் குழந்தைகள் தவறி விழுவதை தடுக்க கம்பிகள், வலை அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாகனங்களை தினமும் பராமரிக்கவும் பதட்டபடாமல் இயக்கவும் டிரைவர்களை அறிவுறுத்தியுள்ளோம்.

இது தொடர்பாக பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், டிரை வர்களுடனான கலந்தாய்வு கூட்டம் 1-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒப்பந்த முறையில் இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆட்டோக்களையும் ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

section1

தொடர்ந்து நீர்வரத்து: பாபநாசம் அணை வேகமாக நிரம்புகிறது

நெல்லை, நவ. 28–சமீபத்திய மழையினால் நெல்லை மாவட்டத்தில் அணைகள், குளங்கள் நிரம்பி உள்ளன. மாவட்டத்தில் உள்ள ....»

MudaliyarMatrimony_300x100px.gif