தென் ஆப்பிரிக்காவில் இறந்ததாக கருதப்பட்ட பெண் 34 ஆண்டுக்கு பிறகு திரும்பினார் || south africa dead lady return 34 years
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
தென் ஆப்பிரிக்காவில் இறந்ததாக கருதப்பட்ட பெண் 34 ஆண்டுக்கு பிறகு திரும்பினார்
தென் ஆப்பிரிக்காவில் இறந்ததாக கருதப்பட்ட பெண் 34 ஆண்டுக்கு பிறகு திரும்பினார்
லண்டன், ஜூலை 29-

இங்கிலாந்தை சேர்ந்தவர் சிட். இவரது மனைவி சூசன் ஆர்ட்ரன் (61) இவர்கள் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 1978-ம் ஆண்டு ரோட்டில் தனியாக சென்ற இவர் மீது கார் மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்தார். உடனே பொதுமக்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே வீடு திரும்பாததால் கணவர் சிட் அவரை பல இடங்களில் தேடினார். இருந்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் கருதினர். அதைத் தொடர்ந்து தனது 4 குழந்தைகளுடன் சிட் இங்கிலாந்து திரும்பி லண்டனில் குடியமர்ந்தார்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் கிச்சை பெற்று வந்த சூசனுக்கு அம்னீசியா என்ற ஞாபக மறதி நோய் ஏற்பட்டது. இதனால்தான் யார் என்பதையே அவர் மறந்துவிட்டார்.

இதற்காக தென் ஆப்பிரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் 34 வருடங்களுக்கு பிறகு அதாவது தனது 61-வது வயதில் குணமடைந்தார். இதையடுத்து தன்னைப் பற்றி பேஷ்புக் இணையதளத்தில் தகவல் வெளியிட்டார்.

அத்துடன் இளமைக் காலம் மற்றும் தற்போதைய தோற்றத்திலான போட்டோவையும் பிரசுரித்து இருந்தார். அதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

34 வருடங்களுக்கு பிறகு சூசன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்தார். இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

அசாஞ்சேவுக்கு தூதரகம் மூலமாக உதவி செய்ய தயார்: ஆஸ்திரேலிய மந்திரி அறிவிப்பு

லண்டனில் அடைபட்டிருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு தூதரக உறவுகளின் மூலம் உதவி செய்ய தயாராக ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif