கோடம்பாக்கத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்: 82 வயது முதியவரும் போராட்டம் || kodampakkam anna hazare supporters hunger strike struggle
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
கோடம்பாக்கத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்: 82 வயது முதியவரும் போராட்டம்
கோடம்பாக்கத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்: 82 வயது முதியவரும் போராட்டம்
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி சென்னையிலும் 5-வது நாளாக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

கோடம்பாக்கம் ரெங்கராஜபுரம் 5 விளக்கு பகுதியில் உள்ள புண்ணியகோடி திருமண மண்டபத்தில் கடந்த 25-ந்தேதி 11 பேர் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ஹேன்ஸ் என்பவர் உள்பட 3 பேருக்கு உடல்நிலை மோசமானதால் அவர்கள் உண்ணாவிரதத்தில் மேற்கொண்டு பங்கேற்க முடியவில்லை.

இன்று 8 பேர் 5-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்கள் பெயர் வருமாறு:-

1. அப்பா இந்திரவேல் (வயது82). சமூக சேவகர் விருகம்பாக்கம்.

2. ஜானிராஜா (வயது 26). ஷேர் மார்க்கெட் புரோக்கர், பூந்தமல்லி.

3. சுனில்குமார் (வயது22), முகப்பேர்.

4. பொன் தங்கவேல் (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர், ஈஞ்சம்பாக்கம்.

5. ஜிகேந்தர் (வயது 42). பானிபூரி மொத்த வியாபாரி, சவுகார்பேட்டை.

6. காந்திமதி (வயது 54), மாதவரம்.

7. பாரத்கிருஷ்ணன் (47), நாமக்கல்.

8 பாலாஜி (வயது26), ஐ.ஏ.எஸ். மாணவர், முகப்பேர்.

இவர்கள் தினமும் தண்ணீர் மட்டும் அருந்துகின்றனர். 2 டாக்டர்கள், 2 நர்சுகள் அடங்கிய குழுவினர் அங்கேயே தங்கி இருந்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உடல்நிலையை பரிசோதனை செய்கிறார்கள்.

இன்று மட்டுமே உண்ணாவிரதம் இருக்க மேலும் 10 பேர் வந்துள்ளனர். அங்கு உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு தேவையான வசதிகளை முரளிதரன், சுரேஷ், சதீஷ் ஆகியோர் முன்னின்று கவனித்து வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

அடையாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களின் உடல் மீட்கப்பட்டது

சென்னை, நவ 29–சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சூளைப்பள்ளம் பகுதியில் கடந்த 26–ந்தேதி அன்று ஆறுமுகம், கார்த்திக் ....»

MudaliyarMatrimony_300x100px.gif