பல்வேறு விபத்துக்களில் மரணம் அடைந்த சப் இன்ஸ்பெக்டர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் ஜெயலலிதா உத்தரவு || rs 2 lakhs to deceased sub inspector family jayalalitha order
Logo
சென்னை 31-08-2015 (திங்கட்கிழமை)
பல்வேறு விபத்துக்களில் மரணம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்-ஜெயலலிதா உத்தரவு
பல்வேறு விபத்துக்களில் மரணம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்-ஜெயலலிதா உத்தரவு
சென்னை, ஜூலை.29-
 
பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பொ.ராஜேந்திரன் கடந்த 22-ந் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் கன்னிகாபுரம் அருகே, திருச்சிராப்பள்ளி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
மேலும் தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த வை.நாடிமுத்து கடந்த 23-ந் தேதி மாரடைப்பால் காலமானார். மற்றும் சென்னை பெருநகர காவல், நொளம்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த எஸ்.பழனிச்சாமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 27-ந் தேதி காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிக்க துயரம் அடைந்தேன்.
 
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன் மற்றும் நாடிமுத்து ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மேலும், அவர்களது குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

உங்கள் செல்லப் பிள்ளைகளை சிறகைவிரித்து பறக்கவிடுங்கள்!

பெற்றோர்களே, குழந்தைகளிடம் நீங்கள் அன்பு காட்டுவது சரிதான்! அதற்காக அவர்களின் கையை விடாமல் அவர்களுடனே பயணிக்க ....»

amarprash.gif