லோக்பால் பிரச்சினை: அன்னா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் || lokpal issue anna hazare indefinate fasting from today
Logo
சென்னை 21-08-2014 (வியாழக்கிழமை)
  • அமீத் ஷா இன்று ஐதராபாத் வருகை
  • சென்னை: ஆவடி அருகே பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 4 பேர் பலி
  • பீகார் - கர்நாடகாவில் 13 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
லோக்பால் பிரச்சினை: அன்னா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்
லோக்பால் பிரச்சினை: அன்னா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்
புதுடெல்லி, ஜூலை.29-
 
லோக்பால் பிரச்சினையில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய அன்னா ஹசாரே, இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.
 
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, அன்னா ஹசாரே குழுவினர் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். அன்னா ஹசாரே இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், தினசரி உண்ணாவிரத மேடைக்கு வந்து ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
 
இந்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் யோகா குரு பாபா ராம்தேவ் தனது ஆதரவாளர்களுடன் வந்து கலந்து கொண்டதால், பார்வையாளர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்தது.
 
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவித்தபோது அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு 4 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
 
இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல், அன்னா ஹசாரேவும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். நேற்று உண்ணாவிரத மேடையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:-
 
மக்கள் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படுவதற்காக எனது இறுதி மூச்சு உள்ளவரை உண்ணாவிரத போராட்டம் தொடரும். உண்ணாவிரதம் இருப்பது மகிழ்ச்சியானது அல்ல. ஆனால், லோக்பால் பிரச்சினையில் அரசு திரும்பத் திரும்ப எங்களை ஏமாற்றி வருவதால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன்.
 
காங்கிரஸ் அல்லது பா.ஜனதா கையில் இந்த நாட்டின் வருங்காலம் பாதுகாப்பாக இருக்காது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். கட்சியும் தொடங்க மாட்டேன். மக்கள் தேர்வு செய்யும் நேர்மையான பின்னணி உள்ள வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
 
நல்லவர்கள் பாராளுமன்றத்துக்கு செல்லாவிட்டால், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாது. உண்ணாவிரதத்துக்கு மக்கள் கூட்டம் இல்லை என்கிறார்கள். பார்ப்பவர்களின் கோணத்தைப் பொருத்தது அது.
 
இந்தியா முழுவதும் 400 மாவட்டங்களில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டம் சேருவதால் மட்டும் ஒரு பணியை நீங்கள் முடித்துவிட்டதாக கருத முடியாது. அதற்காக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
 
இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
 
வார இறுதி விடுமுறை நாள் என்ற போதிலும், நேற்று காலை 11 மணி அளவில் உண்ணாவிரதம் இருந்த ஜந்தர் மந்தர் திடலில் 300 பேர் மட்டுமே இருந்தனர். பின்னர் இந்த எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்தது.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சத்தியமங்கலம் அருகே குட்டையில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் பலி

ஈரோடு, ஆக. 21–ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி பக்கம் கஸ்தூரி நகர் என்ற கிராமம் ....»