ராகுல்காந்திக்கு எந்தப் பதவி கொடுத்தாலும் நன்றாக செயல்படுவார்: ப.சிதம்பரம் || Rahul will do very well in government or Cong Chidambaram
Logo
சென்னை 28-08-2015 (வெள்ளிக்கிழமை)
ராகுல்காந்திக்கு எந்தப் பதவி கொடுத்தாலும் நன்றாக செயல்படுவார்: ப.சிதம்பரம்
ராகுல்காந்திக்கு எந்தப் பதவி கொடுத்தாலும் நன்றாக செயல்படுவார்: ப.சிதம்பரம்
புதுடெல்லி, ஜூலை 28-

ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியிலோ, மத்திய அரசிலோ உயர் பதவி வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் வருங்காலத்தில் பிரதமர் பதவிக்கு அவரை முன்னிறுத்த முடியும் என்பதே அவர்களின் கணிப்பாக இருக்கிறது.

இந்த வரிசையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இணைந்துள்ளார். ராகுல் காந்தியால் எந்த பொறுப்பையும் சிறப்பாக கவனிக்கமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதுபற்றி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது ப.சிதம்பரம் கூறுகையில்,

அரசு அலுவலகமாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும், பாராளுமன்றமாக இருந்தாலும் ராகுல் காந்தியால் நன்றாக செயல்பட முடியும். அவர் எந்த பதவிக்கு நியமிக்கப்பட்டாலும், அது கட்சித்தலைவர் சோனியாகாந்தி, பிரதமருடன் நன்கு ஆலோசனை நடத்தியபிறகே முடிவு செய்யப்படும். அப்படி எந்த பதவிக்கு அவர் வந்தாலும் நாங்கள் வரவேற்போம்’ என்றார்.

இதேபோல் ராகுல்காந்தியை கட்சியின் துணைத்தலைவராக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கொல்கத்தாவில் இடதுசாரி விவசாயிகள் பேரணியில் வன்முறை: போலீஸ் தடியடி, கல்வீச்சால் பதற்றம்

மேற்கு வங்காள மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைக்கு நிவாரணம், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் விவசாயிகளுக்கு மறுகுடியமர்த்துதல் ....»

amarprash.gif