ராணுவம்,போலீஸ் துறைகளை நவீனப்படுத்த பாகிஸ்தான் திட்டம்: ரூ.1,300 கோடி செலவிடுகிறது || pakistan government spend 1300 crore for army and police deapartment
Logo
சென்னை 01-08-2015 (சனிக்கிழமை)
  • சென்னையிலிருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற ரெயில் பெட்டியில் தீ விபத்து
  • சசிபெருமாளின் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
  • டாஸ்மாக் மதுபான கடைகளால் தமிழ்நாடு நாசமாகி விட்டது: வைகோ குற்றச்சாட்டு
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு
  • மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி
  • விடுமுறை நாளில் பணிபுரிந்து கலாமுக்கு அஞ்சலி செலுத்திய ராஜஸ்தான் சட்டமன்ற ஊழியர்கள்
ராணுவம்,போலீஸ் துறைகளை நவீனப்படுத்த பாகிஸ்தான் திட்டம்: ரூ.1,300 கோடி செலவிடுகிறது
ராணுவம்,போலீஸ் துறைகளை நவீனப்படுத்த பாகிஸ்தான் திட்டம்: ரூ.1,300 கோடி செலவிடுகிறது
இஸ்லாமாபாத், ஜூலை.28-
 
பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்களின் தாக்குதல்களால் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இவர்கள் நடத்தும் தற்கொலை தாக்குதலில் பலர் உயிர் இழக்கிறார்கள்.
 
எனவே இதை ஒடுக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ராணுவம், போலீஸ் துறைகள் நவீனப்படுத்தப்படுகிறது.
 
உளவுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் இடையே தேசிய தகவல் தொடர்பு கார்ப்பரேசன் மூலம் ஒருங்கிணைந்த நவீன தகவல் தொடர்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக சுமார் ரூ.1,300 கோடி செலவிடப்படுகிறது.இது முதல் கட்டமாக 10 முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது.
 
பின்னர் மாவட்ட தலைநகர் மற்றும் துணை நகரங்களில் இந்த வசதிகள் படிப்படியாக கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று வெளியிட்டது. இதுபற்றி அதிகாரி கூறுகையில், இந்த புதிய திட்டம் மூலம் தகவல் தொடர்பை மேம்படுத்துவது மட்டுமின்றி, சந்தேகிக்கப்படும் நபர்கள், தீவிரவாதிகள் நடவடிக்கை கண்காணித்து ஒடுக்க முடியும் என்று தெரிவித்தார். இருப்பினும் இத்திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வர இருக்கிறது என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன், ஆக.1–அமெரிக்காவின் நாசா மையம் 'ஸ்பிட்சர்' என்ற டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ....»

MM-TRC-B.gif