கிரீன்லாந்தில் பனிபடலத்தின் மேல் பகுதியில் 97 சதவீதம் திடீரென உருகியது || Greenland snow 97 percent molten
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
  • சிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 40 பேர் பலி
  • ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: அரையிறுதியில் கோவா அணி
  • பிரதமர் மோடி பாரிஸ் சென்றடைந்தார்: உச்சகட்ட பாதுகாப்பு
கிரீன்லாந்தில் பனிபடலத்தின் மேல் பகுதியில் 97 சதவீதம் திடீரென உருகியது
கிரீன்லாந்தில் பனிபடலத்தின் மேல் பகுதியில் 97 சதவீதம் திடீரென உருகியது
வாஷிங்டன், ஜூலை.26-

ஐரோப்பா கண்டத்திற்கு வட மேற்கு பகுதியில் கிரீன்லாந்து தீவு உள்ளது. இந்த தீவு முழுவதும் பனிகட்டிகள் படர்ந்துள்ளன. லட்சகணக்கான ஆண்டுகளாக இந்த பனிகட்டிகள் உருகாமல் அப்படியே இருந்தன. ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக சமீபகாலமாக பனிகட்டிகள் உருகுவது அதிகரித்துள்ளது.

சமீபத்தில் கிரீன்லாந்தில் அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் தீவை போல 2 மடங்கு உள்ள பனிகட்டி ஒன்று உடைந்து தனியாக விலகி இருப்பதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் இந்தியாவின் ஓசியன் சாட்-2 கிரின்லாந்தை படம் பிடித்துள்ளது. அதில் கிரின்லாந்தின் பனிபடலத்தின் மேல்பகுதியில் 97 சதவீதம் வரை திடீரென உருகியிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 8-ந் தேதி எடுத்த படத்தில் 40 சதவீதம் உருகியிருந்தது தெரியவந்தது. அடுத்து 12-ந் தேதி எடுத்த படத்தில் 97 சதவீதம் உருகியிருக்கிறது. வழக்கமாக கோடை காலத்தில் கிரீன்லாந்தில் பனி உருகும். ஆனால் இந்த அளவு அதிகமாக உருகியது கடந்த 30 ஆண்டில் நடந்தது இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். என்ன காரணமாக பணிகட்டி உருகும் வேகம் அதிகமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

அதிகாரப்பூர்வமற்ற பொருளாதார தடைக்கு எதிர்ப்பு: நேபாளத்தில் இந்திய டி.வி. சேனல்கள் முடக்கம்

இந்தியாவின் ‘அதிகாரப்பூர்வமற்ற’ பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேபாளத்தில் இந்திய டி.வி. சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. பிரச்சினைக்கு ....»

MudaliyarMatrimony_300x100px.gif