அமெரிக்க கடற்படையால் சுட்டுக்கொலை: ராமநாதபுரம் மீனவர் உடல் சொந்த ஊரில் அடக்கம் || america navy shot killed fishermen body ramanathapuram
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
  • 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 79 ரன்களில் சுருட்டியது இந்தியா
  • சென்னை நீலாங்கரையில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கடத்தல்
  • சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் மத்திய குழு சந்திப்பு
  • அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் பிரித்வி 2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
  • எதிர்க்கட்சிகள் சமரசம்: சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறுகிறது
  • குறைந்த காற்றழுத்தம் வலுவடைய தொடங்கியது: சனி, ஞாயிறு பலத்த மழைக்கு வாய்ப்பு
  • பீகாரில் மது விற்பனைக்கு தடை: முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி
அமெரிக்க கடற்படையால் சுட்டுக்கொலை: ராமநாதபுரம் மீனவர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
அமெரிக்க கடற்படையால் சுட்டுக்கொலை: ராமநாதபுரம் மீனவர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ராமநாதபுரம், ஜூலை 26-

ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் அரபு நாட்டு கம்பெனிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்கும் வேலை செய்து வருகிறார்கள்.

கடந்த வாரம் இவர்கள் துபாய் சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க கப்பற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர் சேகர் இறந்தார். அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேகரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து இருந்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் எடுத்து முயற்சியின் காரணமாக துபாயில் இருந்து ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சேகரின் உடல் திருச்சிக்கு நேற்று பகல் 3.50 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் சேகரின் உடலை அவருடைய மைத்துனர் முத்துசாமி பெற்றுக்கொண்டார். பின்னர் சேகரின் உடல் வேன் மூலம் அவருடைய சொந்த ஊரான ராமநாதபுரத்தை அடுத்த தோப்புவலசைக்கு இரவு 9.25 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

சேகரின் உடலை பார்த்து அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கதறி அழுதனர். சேகரின் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியை கட்டிப் பிடித்துக்கொண்டு அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் கதறினர்.

அப்போது அவரது தாய் நாகவள்ளி திடீரென்று மயங்கி விழுந்தார். அவருக்கு அக்கம், பக்கத்தினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மீனவர் சேகரின் உடலுக்கு அமைச்சர் சுந்தர்ராஜன், கலெக்டர் நந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ் மகேஷ்குமார், முருகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இரவு 9.40 மணிக்கு மீனவர் சேகரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தோப்பு வலசையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - இராமநாதபுரம்

section1

நெடுந்தீவு–தலைமன்னார் அருகே 4 படகுகளுடன் 20 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 3 ....»