மயிலம் அருகே விவசாயி வெட்டிக் கொலை || mayilam near farmer murder
Logo
சென்னை 30-01-2015 (வெள்ளிக்கிழமை)
  • இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் : டெல்லியில் இன்று ஆலோசனை
  • முத்தரப்பு கிரிக்கெட்: இந்திய அணி 200 ரன்னில் ஆல் அவுட்
  • சென்னை: பூரண மதுவிலக்கை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார் சசி பெருமாள்
  • ஐதராபாத்தில் போலீசார் ரெய்டு: 90 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
  • ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியீடு
  • நாம் நம்பிய காங்கிரஸ் கட்சி தற்போது இல்லை: ஜெயந்தி நடராஜன் குற்றச்சாட்டு
மயிலம் அருகே விவசாயி வெட்டிக் கொலை
மயிலம் அருகே விவசாயி வெட்டிக் கொலை
விழுப்புரம், ஜூலை. 25-

மயிலம் அருகே முப்புளி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60), விவசாயி. நேற்று காலை இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வயல் வேலை செய்ய சென்றார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் வயல்வெளிக்கு சென்று தேடினர். அப்போது சண்முகம் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து சண்முகத்தை வெட்டி கொன்றவர்கள் யார்? நிலத்தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சண்முகம் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விழுப்புரம்

section1

கடன் வாங்கி தருவதாக கூறி பண்ருட்டி வாலிபரிடம் ரூ.6 லட்சம் பணம் பறிப்பு

கள்ளக்குறிச்சி, ஜன.30–பண்ருட்டி அருகே உள்ள காவனிப்பாக்கத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 55), விவசாயி. இவருக்கு தனது ....»