செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தல் || redhills college student girl abduct
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தல்
செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தல்
மாதவரம், ஜூலை.25-
 
செங்குன்றம் அடுத்த குப்பாமணிதோப்பு ஏ.என்.எஸ். தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சுதா (வயது 19). இவர் செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
 
நேற்று கல்லூரி முடிந்து கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் பிற்பகல் 3 1/2 மணி அளவில் செங்குன்றத்தில் வந்து இறங்கினார். அப்போது சிலர் சுதாவை காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து சுதாவின் தந்தை சுப்பிரமணி செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் விசாரணை நடத்தினார்.
 
செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரைபட்டு பகுதியை சேர்ந்த இனியசூரியன் (20) என்பவர் சுதாவை ஒரு வருடமாக காதலித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு இனியசூரியனும், அவரது தந்தையும் சுதாவின் தந்தை சுப்பிரமணியை சந்தித்து பெண் கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார்.
 
இந்த நிலையில் சுதா காரில் கடத்தப்பட்டுள்ளார். எனவே இனியசூரியன் தனது நண்பர்களுடன் சுதாவை கடத்தி சென்றாரா அல்லது சுதா வேறு எங்காவது மாயமாகி விட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்

section1

மாதவரத்தில் சூப்பர்மார்க்கெட்டில் காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி

மாதவரம், நவ. 30–மாதவரம், பைபாஸ் சாலை ரவுண்டானா அருகே பிரபல தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif