இன்று நடக்கும் 2 வது போட்டியில் கோலியின் அதிரடியை தடுப்பது முக்கியம்: ஜெயவர்த்தனே || second one day cricket match kohli play stop jayawardane
Logo
சென்னை 27-02-2015 (வெள்ளிக்கிழமை)
இன்று நடக்கும் 2-வது போட்டியில் கோலியின் அதிரடியை தடுப்பது முக்கியம்: ஜெயவர்த்தனே
இன்று நடக்கும் 2-வது போட்டியில் கோலியின் அதிரடியை தடுப்பது முக்கியம்: ஜெயவர்த்தனே
ஹம்பன்டோ, ஜூலை. 24-

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் இன்று நடக்கிறது. இந்திய அணியின் துணை கேப்டனான வீராட் கோலி பேட்டிங்கில் தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 5 ஆட்டத்தில் 4 சதம் அடித்து முத்திரை பதித்து உள்ளார்.

இன்றைய ஆட்டம் குறித்து இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே கூறியதாவது:-

வீராட் கோலியின் அதிரடி ஆட்டத்தை தடுத்து நிறுத்துவதே எங்களுக்கு முக்கியமானதாகும். அவரை முன்னதாக அவுட் செய்வதை குறிக்கோளாக வைத்துள்ளோம். எங்களது சிறப்பான பந்துவீச்சு மூலம் அவரை எளிதில் அவுட் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

அதிவேகமாக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள் என மூன்று சாதனையை படைத்த ஏ.பி. டி வில்லியர்ஸ்

கிரிக்கெட் உலகில் சாதனை வீரர் என்ற பெருமையை தொடர்ந்து ஏ.பி. டி வில்லியர்ஸ் பெற்று வருகிறார். ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif