பெங்களூர்,
ஜூலை 23-
சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கர்நாடக மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் கட்சி மாறி பிரணாப் முகர்ஜிக்கு ஓட்டு போட்டனர். அவர்கள் யார் என கண்டுபிடிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது.
இந்த தகவலை கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் இன்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது,
இந்த பிரச்சினையை கட்சி மேலிடம் சீரியசாக கருதுகிறது இந்த குழுவை கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா, நான் (ஜகதீஷ்ஷெட்டர்) துணை மந்திரி ஆகியோர் முடிவு செய்து அறிவிக்கப்படும். இந்த குழு அறிக்கையின் பேரில் கட்சி மாறி ஒட்டு போட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் இதுபோன்று கட்சி மாறி எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதை தடுக்க கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது என்றார்.