ஜீவா நடிக்கும் புதுப்படம் ‘யான்’ || Yaan New Movie Jeeva Act director Ravi K chandran
Logo
சென்னை 05-03-2015 (வியாழக்கிழமை)
  • உலக கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்து 318/8 (50 ஓவர்)
  • தமிழகம், புதுவையில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது
  • கருணாநிதி தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது
  • உலக கோப்பை: வங்கதேசம் 107/1 (18 ஓவர்) தமீம் இக்பால் 55*
  • நிர்பயா ஆவணப்படத்தை முன் கூட்டியே ஒளிபரப்பியது பி.பி.சி
ஜீவா நடிக்கும் புதுப்படம் ‘யான்’
ஜீவா நடிக்கும் புதுப்படம் ‘யான்’
ஜீவா நடிக்கும் புதுப்படத்துக்கு ‘யான்’ என  பெயரிட்டுள்ளனர். இப்படத்தை   ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குகிறார். நாயகிக்கு மும்பை அழகி   ஒருவரை தேடுகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஜீவா தற்போது ‘முகமூடி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஒரு சூப்பர் ஹீரோ படம். மிஸ்கின் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தை ஆகஸ்ட் 31-ந் தேதி வெளியிட முடிவு செய்திருக்கின்றனர்.

இதையடுத்து, கௌதம்மேனன் இயக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் முடிந்தபிறகு ‘யான்’ படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

amarprakash160600.gif
amarprakash160600.gif